பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கோச்சிங் சென்டரில் சேர்ந்தவர்கள் பாஸ் ஆகவில்லையெனில் கட்டிய பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி கோச்சிங் சென்டர் துவங்கப்பட்டதோ, அதோபோல சீனாவில் ஒரு கல்வி சேவை நிறுவனம் வாக்குறுதி கொடுத்து தற்போது பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இன்றைய போட்டி மிகுந்த சந்தையில் வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கும் நிலையில், சீனாவில் இந்த நிலை மிகவும் மோசம். அதிலும் சீன அரசு அந்நாட்டில் இயங்கும் பள்ளி கல்வி எட்டெக் நிறுவனங்களை லாபம் நோக்கமற்ற நிறுவனமாக மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகு பிற பிரிவு கல்வி சேவை நிறுவனத்தில் போட்டி அதிகரித்துள்ளது.
Offcn Education Technology Co என்ற நிறுவனம் சீன இளைஞர்களுக்கு அரது வேலைக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் பயிற்சியை அளித்து வருகிறது. இந்தியாவில் போட்டி தேர்வுகளுக்கு மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு எழுதுகிறார்கள் என்றால் சீனாவில் இன்னும் மோசமாம். இதை விட முக்கியமாக சீன அரசு வேலைக்கான தேர்வு உலகிலேயே மிகவும் கடுமையான தேர்வாக பார்க்கப்படுகிறது.

சீன அரசு வேலைக்கான தேர்வு உலகிலேயே மிகவும் கடுமையான தேர்வில் தேர்ச்சி அளவு வெறும் 1.5 சதவீதம் மட்டுமே. தேர்வுகள் கடுமையாக இருக்கும் காரணத்தால் 5 வருடத்திற்கு முன்பு சீன இளைஞர்கள் அரசு வேலைக்கான தேர்வு எழுதுவதில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தனர்.
ஆனால் கடந்த 5 வருடத்தில் சீனா பொருளாதாரமும், வேலைவாய்ப்பு சந்தையும் மோசமானதால் நிலையான வேலை, வருமானம் வேண்டும் என்பதற்காக போட்டி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இதில் பெரிய அளவில் பலன் அடைந்த Offcn Education Technology Co ஒரேயோரு கண்டிஷன் காரணமாக தற்போது நடுத்தெருவில் நிற்கிறது.
Offcn Education Technology Co நிறுவனத்தின் நிறுவனரான Lu Zhongfang மற்றும் அவரது மகனான Li Yongxin ஆகியோர் திடீர் வர்த்தக உயர்வாலும், வருமானத்தாலும் இவர்களுடைய சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலராக உயர்ந்தது.
போட்டி தேர்வுக்கான பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கோச்சிங் சென்டரில் சேர்ந்தவர்கள் பாஸ் ஆகவில்லையெனில் கட்டிய பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி கோச்சிங் சென்டர் அதிகப்படியானவர்களை சேர்த்தனர். இதே பார்மூலா-வை தான் Offcn Education Technology பயன்படுத்தியது.
இந்த கண்டிஷன் மூலம் பெரிய அளவிலான பணம் வெளியேறினாலும், Offcn Education Technology Co நிறுவனத்தில் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. உதாரணமாக 2019ல் பெயில் ஆனவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை 44 சதவீதமாக இருந்த நிலையில், 2022ல் இது 70 சதவீதமாக உயர்ந்தது.
கடந்த 2 வருடமாக இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் Offcn Education Technology Co நிறுவனத்தின் நிறுவனரான Lu Zhongfang மற்றும் அவரது மகனான Li Yongxin ஆகியோரின் சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலரில் இருந்து வெறும் 1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2022 இந்நிறுவனம் 158 மில்லியன் டாலர் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.
2019ல் 24000 சீன அரசு வேலைக்கு 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர், இதுவே 2022ல் 37000 சீன அரசு வேலைக்கு சுமார் 26 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.


Click it and Unblock the Notifications