இந்தியாவில் வர்த்தகத்தையும், உற்பத்தியையும் துவங்க பல முன்னணி சீன நிறுவனங்கள் ஆர்வம் காட்டி முதலீடு செய்யத் தயாராக இருந்த நிலையில் மத்திய அரசு அண்டை நாடுகளின் முதலீடுகள் மீது விதித்து இருந்த கட்டுப்பாடுகள் மூலம் பல சீன நிறுவனங்கள் ஆட்டோமொபைல் சந்தைக்குள் வருவதையே நிறுத்தியது.
ஆனால் இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் முன்னதாக இந்தியச் சந்தைக்குள் நுழையச் சீனாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான BYD தற்போது ரீடைல் விற்பனையில் இறங்கியுள்ளது.
ஆட்டோமொபைல் துறை
இந்திய ஆட்டோமொபைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது குறிப்பாக எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் அனைத்து முன்னணி கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியைத் துவங்கத் திட்டமிட்டு உள்ள நிலையில் இந்திய நிறுவனங்களுக்குப் போட்டியாகச் சீன நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.
சீனா-வின் BYD
இந்தியாவின் சீன ஆட்டோமொபைல் நிறுவனமான BYD ஏற்கனவே எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்திருந்தாலும் இதுநாள் நாள் வரையில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.
BYD-ATTO 3 கார்
இந்த நிலையில் தற்போது எலக்ட்ரிக் எஸ்யூவி காரான e6-ஐ ரீடைல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதோடு புதிதாக ஒரு ப்ரீமியம் எஸ்யூவி மாடல் BYD-ATTO 3 காரையும் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் டிசைன் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
50000 ரூபாய்
இப்புதிய எஸ்யூவி காரான BYD-ATTO 3 காரை வெறும் 50000 ரூபாய் முன்பணம் மூலம் புக்கிங் செய்ய முடியும். ஜனவரி 2023 முதல் புக்கிங் செய்யப்பட்ட முதல் 500 பேருக்குக் கார் டெலிவரி செய்யப்படும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விலை, போட்டி
அடுத்த மாத துவக்கத்தில் புக்கிங் வேகத்தைப் பார்த்து BYD அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காரின் திறன், டிசைன் ஆகியவற்றைப் பார்க்கும் போது Hyundai Kona EV மற்றும் MG ZS EV ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சம்
இந்த BYD-ATTO 3 காரை 0-80 சதவீத சார்ஜிங் வெறும் 50 நிமிடத்தில் ஏறும் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் கொண்டு உள்ளது, இதேபோல் ஒரு முழுமையாகச் சார்ஜ் செய்யப்பட்ட கார் 521 கிலோமீட்டர் வரையில் பயணம் செய்யும். 0-100 kmh வேகம் வெறும் 7.3 நொடியில் எட்டும். மேலும் இந்தக் காரில் 7 ஏர்பேக் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications