ஆண்களை உற்சாகப்படுத்த பெண்களை மேக்அப் போடச் சொன்ன உயர் அதிகாரி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்கு பெண் ஊழியர்கள் நன்றாக மேக்அப் போடவேண்டுமென்று வலியுறுத்திய சீன நிறுவன அதிகாரிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சீனாவை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருப்பவர் லாவோ.

2023 நவம்பர் 30 ஆம் தேதி நிறுவனத்தின் வீசாட் குரூப்-ல் அவர் பேசியதை தான் இப்போது உலகமே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அந்த குரூப்-ல் 5 பெண் ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்களை உற்சாகப்படுத்த பெண்களை மேக்அப் போடச் சொன்ன உயர் அதிகாரி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

வீசாட் குரூப் சாட்டில் லாவோ பேசுகையில், பெண் ஊழியர்கள் நன்றாக மேக்அப்பையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இதைக் கேட்ட அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பெண் ஊழியர்கள் நன்றாக மேக்அப் போட்டுக்கொண்டால் அது ஆண் ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வதற்கு உதவியாக இருக்கும்.

அதோடு ஆண் ஊழியர்கள் கிரவுட்பண்டிங் முறையில் பணம் திரட்டி உங்களை மாலையில் டீ-க்கு அழைத்துச் செல்வார்கள் என்றார். இதைக் கேட்ட பெண் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியையைும் வருத்தத்தையும் அடைந்தனர். லாவோ-வின் மெசேஜ்-க்கு யாரும் பதில் சொல்லவில்லை.

யாரும் பதில் போடாததை தொடர்ந்து, ஊழியர்களை பேசவைக்க போனஸ் வேண்டும் என்றால் ரிப்ளை செய்யுங்கள் என மறைமுகமாக மிரட்டினார். இந்த நிலையிலும் யாரும் பதில் அளிக்கவில்லை. இதில் கடுப்பான லாவோ இந்த மெசேஜ் எப்போது வருகிறதோ அப்போது, பதில் போடுங்க.. பதில் அளிக்காதவர்களின் போனஸ் குறைக்கப்படும் என கடுமையாக லாவோ கூறியுள்ளார்.

இந்த உரையாடல் அனைத்தும் பின்னர் சமூகதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரால் சோசியல் மீடியாவில் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏராளமான நெட்டிசன்களை தங்களது பதிவுகளில் அதிகாரி லாவோவை வறுத்து எடுத்துவிட்டனர்.

ஆனால் லாவோ உடனடியாக இதை மறுத்துவிட்டார். தான் ஆண் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக எந்த பெண் ஊழியரையும் மேக்அப் போட வலியுறுத்தவில்லை என்று பதில் அளித்தார்.
அது வெறும் ஒரு ஜோக். நாங்கள் அதை கூட்ட உரையாடலில் இருந்து நீக்கிவிட்டோம். அது ஒரு விஷயமே இல்லை என்று ஊழியர்களுக்கு அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் அவரது நடத்தையைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு கணைகள் தொடுக்கப்பட்டன. ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஆண் ஊழியர்கள் எல்லாம் ஏன் உடற்பயிற்சி செய்யச் சொல்லவில்லை என்று நையாண்டியுடன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவர், இதெல்லாம் ஒரு ஜோக்கா. சப்பை. இந்த ஜோக்குக்கு சிரித்த ஒரேயொருவர் அந்த அதிகாரி லாவோ மட்டும்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிட்டது அதிகாரி லாவோவின் நிலைமை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+