ஒவ்வொரு நிறுவனம் தற்போது செலவுகளைக் குறைக்கும் விதமாக ஏஐ, கிளவுட், ஆட்டோமேஷன் போன்றவற்றைக் கையில் எடுத்து வரும் வேளையில்.. ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் பணிநீக்கம் நடந்து வருகிறது. ஆனால் சில நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வித்தியாசமான முறையைக் கையாளுகின்றனர்.
ஒரு சீன நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது அதன் ஊழியர்களுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் பெயர் தெரியாத இந்தச் சீன நிறுவனத்தின் செயல்பாடுகள் உலகளவில் இருக்கும் மக்களையும் கோபப்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது.

சீனாவின் முக்கியமான Xian பகுதியை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம், Shaanxi என்ற முக்கிய நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும், அதேவேளையில் புதிய வர்த்தகத்தைப் பெற வேண்டும்.
இந்த இரண்டையும் ஒரு சேர செய்து முடிக்க இந்நிறுவனம் தந்திரமான முறையைக் கையாள முடிவு செய்தாக இந்த விளம்பர நிறுவனத்தின் தலைவர். இதன் படி Shaanxi என்ற முக்கிய நகரத்தில் இருக்கும் ஊழியர்களை மலை கிராமங்களுக்கு இடம் மாற்றினார்.

பரபரப்பான நகரத்திலிருந்து தொலைதூர மலைப்பகுதிக்கு ஊழியர்களைத் தனித்தனியாக இடம்பெயர்ந்தார். வேறு வழி இல்லாமல் நிறுவனத்தின் கட்டளையை ஏற்றுச் சென்ற ஊழியர்களுக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.
இப்படி இடமாற்றம் செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட 70 சதவீத பணியாளர்கள் அடுத்த 4 நாட்களில் ராஜினாமா செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஊழியர்களுக்குப் பணியிடை நீக்கம் செய்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
மலைப்பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே நிறுவனம் மீண்டும் நகர அலுவலகத்தில் புதிய ஊழியர்களைப் பணியமர்த்தத் தொடங்கியது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையின்படி, நிறுவனத்தின் ஏமாற்று உத்திகளை அதன் முன்னாள் ஊழியர் அம்பலப்படுத்தினார்.
அவர் பணிபுரிந்த Xian-ஐ தளமாகக் கொண்ட விளம்பர நிறுவனம் Qinling மலைகளில் மிகவும் தொலைதூர இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும், புதிய இடத்தின்படி ஊழியர்கள் அலுவலகத்தை அடைய இரண்டு மணிநேரம் பயணிக்க வேண்டும், அதாவது அவர்கள் தங்கள் நாளின் நான்கு மணிநேரத்தை வேலைக்குச் செல்வதில் செலவழித்தனர்.
இன்னும் மோசமானது என்னவென்றால் இந்த இடங்களில் பொதுப் போக்குவரத்து வசதிகள் கூட இல்லை. கேப்-ல் செல்ல வேண்டுமாயின் 50 முதல் 60 யுவான் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல் இங்குத் தங்குவதற்குக் கூடச் சரியாக வசதிகள் இல்லாத காரணத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 70 சதவீத ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.
நிறுவனத்தின் திட்டமே, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தால் Severance Pay செலுத்த வேண்டும், ஆனால் அவர்களாகவே ராஜினாமா செய்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. இதைத் திட்டமிட்டுத் தான் இந்த நிறுவனம் சுமார் 20 ஊழியர்களை Qinling மலைப்பகுதிக்கு இடம்மாறியுள்ளது, இதில் தாக்குப் பிடிக்க முடியாமல் 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications