சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் குறிப்பிட்ட ராசி கொண்டவர்களை பணிக்கு அமர்த்தாமல் தவிர்த்து வரும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாங்டுவாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்களது நிறுவனத்திற்கும் தங்கள் நிறுவன உரிமையாளருக்கும் கெட்டது நடைபெறும் என கருதி குறிப்பிட்ட ராசிக்காரர்களை வேலைக்கு எடுப்பதில்லையாம்.
Sanxing Transportation என்ற நிறுவனம் தெற்கு சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக விளம்பரம் செய்து இருந்தது. அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட ராசி கொண்ட நபர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாய் ராசியில் பிறந்தவர்கள் நிறுவனத்திற்கும் நிறுவனத் தலைவருக்கும் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக அந்த நிறுவனம் இவ்வாறு விளம்பரம் செய்திருப்பதாக தெரிகிறது. ஏனெனில் நிறுவன உரிமையாளரின் ராசி டிராகன் ஆகும்.

சீன ஜாதக முறைப்படி டிராகன் மற்றும் நாய் ஆகிய இரண்டும் எதிராளிகளாக பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளருடைய ஜாதக ராசி என்பது டிராகன் ஆகும். எனவே சீன முறைப்படி டிராகனுக்கும் நாய்களுக்கும் ஒத்துப்போகாது இரண்டும் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவாகவே இருக்குமாம்.
இதனாலேயே நாய் ராசி கொண்டவர்கள் வேண்டாம் என தங்களது நிறுவனம் முடிவெடுத்துள்ளது என சான்சிங் டிரான்ஸ்போர்ட்டேஷன் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
மேலும் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் தகுதி குறைவாக இருந்தாலும் அவர்களது ராசி பொருத்தமானதாக இருந்தால் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஜாதக நடைமுறைப்படி 12 ராசிகள் உள்ளன. இதில் டிராகன் என்பது நீருடன் சேர்க்கப்பட்ட ராசியாக பார்க்கப்படுகிறது, நாய் என்பது நெருப்புடன் சேர்க்கப்பட்ட ராசியாக பார்க்கப்படுகிறது. எனவே தான் இந்த இரு ஜாதகக்காரர்களும் ஒரே இடத்தில் இருந்தால் அது ஒத்து வராது என அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்த நிறுவனத்தின் இத்தகைய கொள்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைபோ தளத்தில் பலரும் இது ஒரு மூடநம்பிக்கை என்றும் இப்படி ஒரு நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். வேலைக்கு எடுப்பவரின் திறமையை கவனிக்காமல் ராசியை கொண்டு அவர் சரிபட்டு வரமாட்டார் என முடிவு செய்வது நியாயமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications