ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதுடன் அதனை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும். சில நிறுவனங்கள் அதற்கு மாறாக ஊழியர்களுக்கு பெரிய அளவில் பணத்தை தவிர்த்து பொருட்களாக, அதாவது பைக், கார் போன்ற பரிசுகளையும் கூட வழங்குகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு சீன நிறுவனம் பணத்தை டேபிளில் சிதறவிட்ட அதை ஊழியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த Henan Mining Crane Co என்ற நிறுவனம், ஆண்டு கூட்டம் நடத்தியது. அப்போது, ஊழியர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதில், ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்தது. அப்போது 60 மில்லியன் யுவான் அதாவது ரூ.71,62,19,400 பணத்தை ஒதுக்கியது. இது நிறுவனத்தின் ஆண்டு போனஸ் 100 மில்லியன் யுவான் அதாவது ரூ. 1,19,37,80,000 ஆகும். அதனை 60மீட்டர் முதல் 70 மீட்டர் கொண்ட டேபிளில் பரப்பிவிட்டது. எந்த ஊழியருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தீர்மானிக்க ஒரு போட்டியை ஏற்பாடு செய்தது.

30 பேர் கொண்ட குழுவிலிருந்து, 15 நிமிடங்களுக்குள் தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தை எண்ணுவதற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதில், அணிகள் தாங்கள் எண்ணிய அனைத்தையும், குழுவில் சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன. அப்படி தவறாகக் கணக்கிடப்பட்ட பணமானது போனஸில் இருந்து கழிக்கப்படும். இந்த நிகழ்வின் போது ஹெனான் நிறுவனர் கூடுதலாக 20 மில்லியன் பரிசுத்தொகையைச் சேர்த்து கொடுத்துள்ளார். அதாவது, 40 மில்லியன் யுவனிலிருந்து 60 மில்லியன் யுவானாக உயர்த்தியது
இந்த போனஸ் போட்டியில், ஒரு நபர் மட்டும் $100K யுவான் அதாவது ரூ.11,93,997 மதிப்பிலான பணத்தை 15 நிமிடங்களில் எண்ணி முடித்துள்ளார். மற்ற ஊழியர்கள் முடிந்தவரை விரைவாக பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இது நிறுவனம் வழங்கிய அதிகபட்ச ஆண்டு இறுதி போனஸ் ஆகும்.
இந்த நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் வருடாந்திர இரவு உணவின் போது ஊழியர்களுக்கு S$14 மில்லியன் யுவான் அதாவது ரூ.16,71,23,460 பெரும் தொகையை விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் வீடியோ, சீன சமூக ஊடக தளங்களான Douyin மற்றும் Weibo மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டது. அதில், பணம் நிரப்பப்பட்ட ஒரு பெரிய டேபிளில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதனை ஊழியர்கள் போனஸாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல பணத்தை எண்ணத் தொடங்குகிறார்கள்.
நீங்கள் UPI அதிகம் யூஸ் பண்றீங்களா? இந்த விஷயங்கள் தெரியாவிட்டால் பிரச்சனையில் சிக்கிவிடுவீர்கள்..!!
இந்த வீடியோவில் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மக்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியும், நகைச்சுவைகளைப் பகிர்ந்துகொண்டு பலவிதமான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி ஒரு பயனர் எனது நிறுவனம் போலவே நடக்கிறது. ஆனால், பணத்திற்குப் பதிலாக அவர்கள் டன் கணக்கில் பணிச்சுமையைத் தருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த சர்க்கஸ் சட்டத்திற்குப் பதிலாக நீங்கள் தொழிலாளியின் கணக்கில் வரவு வைக்கலாம். இது ஒரு வகையான அவமதிப்பு என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications