சென்னை: எலக்ட்ரிக் வாகன துறையில் யாராலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் சீனா, ஏற்கனவே அமெரிக்க சந்தையில் நுழைவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது ஐரோப்பாவிலும் புதிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
சீனாவில் தற்போது பாரம்பரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் அல்லாது ஹூவாய், சியோமி, நியோ போன்ற பல டெக் நிறுவனங்களும், புதிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து மாஸ் காட்டினாலும், பல சீன நிறுவனங்கள் மோசமான தரத்தில் மலிவு விலையில் கார்களை தயாரிக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

இந்த மலிவு விலை சீன எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) தற்போது ஐரோப்பிய யூனியன் (EU) நாடுகளுக்கு செல்வதில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம், சீனாவில் தயாரிக்கப்படும் மலிவு விலை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை உயர்த்துவதாக ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.
எதற்காக இந்த வரி..?: சீனா, உலகளாவிய EV துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்துறையில் செயல்படும் நிறுவனங்களுக்குச் சீன அரசு நிதியுதவியை அள்ளிக்கொடுத்தது. இதனால் பல நிறுவனங்கள் போலியாக கார்களை விற்பனை செய்யப்பட்டதாகக் கணக்குக் காட்டி அரசின் மானியத்தை அனுபவித்து வந்தன.
சீன அரசு கண்டிப்பு: இதைச் சீன அரசு கண்டுபிடித்து ஆட்டோமொபைல் நிறுவனங்களை சுளுக்கெடுக்க துவங்கிய நிலையில், சீனாவில் விற்கப்படாமல் இருக்கும் கார்களையும், மலிவு விலையில் அதிகப்படியான கார்களை தயாரித்தும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாரானது சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.
சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முடிவு: இதன் மூலம் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அரசின் மானியத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த மலிவு விலை கார்கள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு வந்தால் அந்த நாட்டில் இருக்கும் கார் நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த சூழ்நிலையில் தான் ஐரோப்பிய யூனியன் சீன கார்கள் நுழைவதை வரி மூலம் முட்டுக்கட்டை போட துவங்கியுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை: அமெரிக்க உற்பத்தியாளர் சங்கம் (Alliance for American Manufacturing) சீன அரசின் நிதியுதவி பெறும் எலக்ட்ரிக் வாகனங்கள் "அமெரிக்க கார் துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரித்திருந்தது. இதை தொடர்ந்து தற்போது ஐரோப்பிய யூனியன் வரியை விதிக்க துவங்கியுள்ளது.
எலான் மஸ்க்: அதேபோல், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்த ஆண்டு தொடக்கத்தில், "சீன எலக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதால், வர்த்தகத் தடைகள் இல்லாமல் அவை உலகளவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்களைத் தோற்கடித்துவிடும்" என்று கணித்திருந்தார்.
சீனா ஒரு தீர்க்கதரிசி: எலான் மஸ்க்-ன் இந்த கருத்தும் கிட்டத்தட்ட உண்மை தான், சீனாவின் உற்பத்தி திறனும், சப்ளை செயினும் உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியாவில் தயாரிக்கப்படும் 100 ரூபாய் மதிப்புடைய பொருள் சீனாவில் 50 ரூபாய்க்கு தயாரிக்க முடியும். இதனாலேயே பல காரணங்களைச் சொல்லி மேற்கத்திய நாடுகள் சீன பொருட்களுக்குத் தடையும், வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா - சீனா: அமெரிக்கா உடன் கிட்டத்தட்ட 8 வருடமாக வர்த்தக போரை எதிர்கொண்டு வரும் சீனா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே சீனாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
சீனா EV ஆதிக்கம்: உலகளவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களில் 60 சதவீதம் சீனாவிலிருந்தே வருகின்றன. எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு, இயக்கும், சப்ளை செயின் ஆகியவற்றில் சீனா உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதேபோல் எலக்ட்ரிக் வாகன சூழலை மேம்படுத்தச் சீன அரசு பெரிய அளவிலான மானியங்களை வழங்கி வருகிறது.
சீனா முன்னோடி: 2001 ஆம் ஆண்டில் சீன அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் பிற எலக்ட்ரிக் வாகன தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கச் சீன அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது.
சீன வங்கி உதவி: உள்நாட்டு வங்கிகளின் ஆதரவுடன் இந்த எலக்ட்ரிக் வாகன கொள்கை, கார் உற்பத்தி கட்டமைப்புக்கு நிதியுதவி வழங்குவதில் துவங்கி கார் வாங்கும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன், அரசின் மானியம் ஆகியவற்றின் மூலம் எலக்ட்ரிக் வாகன விற்பனை சீனாவின் வான் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவில் இருக்கும் சீன நிறுவனங்கள்: ஆனால் சீனாவுக்கு ஐரோப்பிய வரி விதிப்பு ஒரு பிரச்சனையே இல்லை, காரணம் சீனாவின் BYD ஹங்கேரி நாட்டில் தொழிற்சாலை கட்டி வருகிறது, Chery நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் Catalonia பகுதியில் புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. VOLVO பெல்ஜியம் நாட்டில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது.
ஐரோப்பாவில் உற்பத்தி: இதனால் ஐரோப்பிய மண்ணில் சீன கார்களை தயாரிப்பது பெரிய விஷயமே இல்லை, முழுமையாகத் தயாரிக்க முடியாவிட்டாலும் CKD யூனிட்களாக சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவில் அசம்பிளி செய்யப்படும்.
லாபம் நிச்சயம்: இது மட்டும் அல்லாமல் சீனா உயர்தர கார்களையும் மலிவான விலையில் தயாரிக்க கூட்டமைப்பை கொண்டு இருக்கும் காரணத்தால் 30 சதவீதம் வரியை விதித்தாலும் சீன நிறுவனங்கள் லாபத்தை பெற முடியும் என்பதால் சீனா-வுக்கு இந்த வரி பெரிய பொருட்டே இல்லை.
சீனாவின் பதிலடி: இதேவேளையில் சீனாவில் ஐரோப்பிய கார் பிராண்டுகள், குறிப்பாக ஸ்போர்ட்ஸ் கார் பிராண்டுகள், ஆடம்பர கார் பிராண்ட்கள் அதிகளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது. இதனால் சீனா ஐரோப்பிய கார்கள் மீது அதிக வரி விதிக்க தயாராகி வருகிறது, இதில் முதல்கட்டமாக 2.5 லிட்டர் இன்ஜின் கொண்ட ஐரோப்பிய கார்களுக்கு சீனா வரியை உயர்த்த தயாராகி வருகிறது.
எளிய தீர்வு: ஐரோப்பிய சந்தையில் ஐரோப்பிய கார் நிறுவனங்களின் விலைக்கு ஏற்ப சீன கார்களின் விலையும் உயர்த்தப்பட்டால் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும். சீனா நிறுவனங்கள் வருகையால் அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுவது தான் அடிப்படை பிரச்சனை.
இந்தியா - சீனா: இந்தியாவில் சொல்லவே வேண்டாம், ஏற்கனவே முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்க முடியாது, இறக்குமதி செய்யப்பட்டு விற்க முயற்சித்தால் 100 சதவீத வரி சட்டம் உள்ளது. இதனால் சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு குறைவு என்றாலும் தற்போது JSW உடன் MG மோட்டார்ஸ் கூட்டணி வைத்திருப்பது மூலம் புதிய வழி பிறந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications