இந்தியா எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் அதிக நுழைவு தடைகள் (வரி, விதிமுறைகள்) அதற்கு இடையூறாக உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் கனவு.
இதனால் பல சர்வதேச எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுகின்றன, இதற்குக் காரணம் அதிகப்படியான வரி விதிப்பு. எலான் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதிக வரியை விதிப்பைச் சுட்டிக்காட்டியே இந்தியாவில் இதுவரையில் முதலீடு செய்யாமல் நிற்கிறது.

அதேசமயம், சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான BYD இந்தியாவில் 100 கோடி டாலர் வரையில் முதலீடு செய்ய தயார் என அறிவித்த திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததுள்ளது. இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் நிலையில், இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு பிஓய்டி நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து நம் நாட்டில் 100 கோடி டாலர் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையைத் தொடங்கும் திட்டத்துக்கு அனுமதி கோரியது. ஆனால் ஒழுங்குமுறை அமைப்புகள் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் இந்தியச் சந்தையில் கால் பதிக்க வேண்டும் என்ற பிஓய்டி நிறுவனத்தின் திட்டம் தோல்வியில் முடிந்தது. மேலும், சீனாவின் மற்றொரு கார் தயாரிப்பாளரான கிரேட் வால் மோட்டார் நிறுவனமும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறத் தவறியதால் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தைக் கைவிட்டு வெளியேறியது.
கார் இறக்குமதியில் இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறை கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்கள் வேகமாக வளர உதவியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றன.
இதேபோல் இந்திய அரசு ஆட்டோமொபைல் துறையில் மட்டும் அல்லாமல் மொத்தமாகவே சீன முதலீடுகளை ஏற்பதை குறைத்துள்ளது. இந்திய எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து இந்திய அரசு, சீனா மற்றும் சீனா தொடர்பான முதலீடுகளை மொத்தமாகத் தடுத்து வருகிறது. இதனால் BYD, கிரேட் வால் போன்ற எந்த முதலீட்டுக்கும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை.
அதேசமயம், எலான் மஸ்க்குக்கு சொந்தமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா போன்ற சீனாவை சாராத நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வசதியை உருவாக்க, விதிகளில் திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள், சீன நிறுவனங்கள் இந்திய சந்தைக்குள் வருவதைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் இது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பியூஸ் கோயல் பதிலளிக்கையில், பொதுவாக வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் போது இந்தியாவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் சீனா மலிவான பொருட்களைப் பிற நாடுகளில் குவிப்பது குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் சீனா பல நியாயமற்ற நடைமுறைகள் செயல்படுத்தி வர்த்தக சந்தையைக் கைப்பற்றுகிறது.
நாட்டின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு யாரை முதலீடு செய்ய அனுமதிக்கிறோம் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போதைக்கு பிஓய்டி நிறுவனத்துக்குத் தடை என்று தெரிவித்தார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications