Bao Fan திடீர் மாயம்.. சீன நிதிதுறை அதிர்ச்சி.. யார் இவர்..? என்ன நடந்தது..?

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் பணப்பரிமாற்றத்தை பொறுத்தே அமைகின்றது. பணம் ஒரு இடத்தில் நிலையாகத் தங்கி விட்டால் அந்த நாடு பொருளாதார மந்த நிலையை நோக்கிச் செல்கின்றது என எடுத்துக் கொள்ளலாம்.

கைக்குக் கை மாறும் பணமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்குகின்றது. பணத்தை ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்குப் பரிமாற்ற வங்கிகள் சேவை அளிக்கின்றன. அத்தகைய வங்கிகளின் செயல்பாடு அதன் தலைவரைப் பொறுத்து அமைகின்றது.

இந்த நிலையில் சீனாவின் நவயுக வங்கித் தலைவராக இருக்கும் பாவோ ஃபேன் திடீரென மாயமாகியுள்ளார். யார் இவர்..? இவர் ஏன் முக்கியமானவர்..?!

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம்

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் அந்த நாட்டின் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அங்குச் செயல்படும் பல்வேறு உயர் தொழில்நுட்ப வங்கிகளின் தலைவர்களில் பாவோ ஃபேன் மிக முக்கியமானவராக விளங்குகின்றார்.

பாவோ ஃபேன்

பாவோ ஃபேன்

அத்தகைய சிறப்பு வாய்ந்த பாவோ ஃபேன் (Bao Fan) மிகச் சமீபமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டார், அதாவது மாயமாகியுள்ளார். சீனாவில் இதுபோன்ற நிகழ்வு பெரு தலைவர்களுக்குச் சில நேரம் நடந்திருந்தாலும், Bao Fan காணாமல் போனது அந்த நாட்டின் நிதித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாயம்

மாயம்

 

கடந்த வியாழன் (பிப்ரவரி 16) அன்று, பாவோவின் நிறுவனமான சீனா ரெசினசென்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (China Renaissance Holdings Ltd) அவருடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறியதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாகப் பாவோ ஃபேன் தன்னுடைய நிறுவனத்தையும், குடும்பத்தையும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சீன அரசு விசாரணை

சீன அரசு விசாரணை

இதேவேளையில் சீன ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காங் லின் கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதல் சீன அரசின் விசாரணை வளையத்தில் உள்ளார். காங் லின் சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மேலும் காங் லின் கடந்த ஆண்டுச் சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

பங்கு விலை பாதாளத்திற்குச் சென்றது

பங்கு விலை பாதாளத்திற்குச் சென்றது

பாவோ ஃபேன் (Bao Fan) காணாமல்போன நிலையில் சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்க்ஸ் நிறுவன பங்கு வெள்ளியன்று (பிப்ரவரி 17) 50% சரிந்தது, ஹாங்காங் சந்தையில் வர்த்தகத் துவக்கத்தில் சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்க்ஸ் நிறுவன பங்கு விலை சுமார் 50% சரிந்து 0.64 டாலர் (சுமார் HK$5) என்ற அளவுக்குக் குறைந்து வர்த்தகமாகியது.

19.04 மில்லியன் பங்குகள்

19.04 மில்லியன் பங்குகள்

அதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 356.7 மில்லியன் டாலர் (HK$2.8 பில்லியன்) காற்றில் கரைந்து விட்டது ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் நேற்றைய வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சியில் இருந்து மீண்டு 28% வீழ்ச்சிக்கு வந்த போது சுமார் 19.04 மில்லியன் சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனப் பங்குகள் கை மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.

பல கேள்விகள்

பல கேள்விகள்

இதுவரையில் சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்க்ஸ் நிறுவன பங்குகள் இந்த அளவுக்கு ஒரே நாளில் வர்த்தகமானது கிடையாது. ஒருபக்கம் முன்னாள் உயர் அதிகாரி மீது அரசு விசாரணை, மறுபக்கம் தலைவர் மாயம், இதற்கிடையில் 19.04 மில்லியன் பங்குகள் கைமாறியுள்ளது. இதனால் பல கேள்விகள் எழுந்துள்ளது.

அடிக்கடி காணாமல் போகும் சீன உயர்மட்ட நிர்வாகிகள்

அடிக்கடி காணாமல் போகும் சீன உயர்மட்ட நிர்வாகிகள்

சீனாவில் உள்ள மிக முக்கியமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடிக்கடி பிரச்சனையில் மாட்டுகின்றனர். பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் அரசாங்க விசாரணையில் இருந்து தப்பிக்கத் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விடுகின்றனர். இது எப்பொழுதாவது நடந்தால் பரவாயில்லை. இது அடிக்கடி அரங்கேறுகின்றது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்

2021 இன் பிற்பகுதியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டின் 60 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நிதித் துறையை டார்கெட் ஆகக் கொண்டு ஊழல் எதிர்ப்பு விசாரணையைத் தொடங்கினார். இந்த விசாரணை வளையத்தில் Everbright Securities Co. மற்றும் Guotai Junan Securities Co உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சிக்கிக் கொண்டன. இதன் வாயிலாகவே சீன ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காங் லின் விசாரணையில் உள்ளார்.

பாவோ ஃபேன் திறமை

பாவோ ஃபேன் திறமை

பாவோ ஃபேன் தலைமறைவுக்கு முன், சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனமான Seazen Group லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான க்யூ டெஜுன் (Qu Dejun) தலைமறைவானார். அவரை அணுகவோ அல்லது தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது .

கையகப்படுத்துவதில் வல்லவர்

கையகப்படுத்துவதில் வல்லவர்

கடினமான இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களை மேற்கொள்வதில் வல்லவராக ஃபேன் விளங்கினார் என அவர் மேலும் தெரிவிக்கின்றார். அவரின் திறமைக்குச் சான்றாக டிடி குளோபல் இன்க் மற்றும் மெய்துவான் ஆகியவற்றின் இணைப்பு விளங்குகின்றது.

சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் துவக்கம்

சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் துவக்கம்

அவர் 2005 இல் சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்திற்காகச் சுமார் 346 மில்லியன் டாலரை திரட்டிய பிறகு, அந்த நிறுவனத்தை 2018 இல் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட்டார். இந்நிறுவனம் ஒரு சிறந்த முதலீட்டாளராக உள்ளது.

முதலீடுகள்

முதலீடுகள்

பாவோ ஃபேன் உருவாக்கிய சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் சீனாவில் NIO Inc, WuXi AppTec Co உட்படப் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. சீனா ரெசினன்ஷ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மிகச் சமீபத்திய இடைக்கால அறிக்கையின்படி, அந்த நிறுவனம் சுமார் $7.1 பில்லியன் (48.6 பில்லியன் யுவான்) நிதியை நிர்வகிக்கின்றது.

க்யூ டெஜுன் தலைமறைவு

க்யூ டெஜுன் தலைமறைவு

பாவோ ஃபேன் தலைமறைவுக்கு முன், சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனமான Seazen Group லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான க்யூ டெஜுன் (Qu Dejun) தலைமறைவானர். அவரை அணுகவோ அல்லது தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது .

டேலியன் வாண்டா குழுமம்

டேலியன் வாண்டா குழுமம்

பிப்ரவரி 13 ஆம் தேதி டெஜுன் முன்பு பணிபுரிந்த டேலியன் வாண்டா குழுமத்தின் மீதான விசாரணையில் தொடர்பாக அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வந்தார். சீன ரியல் எஸ்டேட் நிலைமை குறித்துப் பேசவே தேவையில்லை, மிகவும் மோசமான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+