சீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா.. இந்த முறை பின்டெக் துறை..!

இந்திய அரசு தகவல் பாதுகாப்பு காரணமாக 200க்கும் அதிகமாகச் சீன செயலிகளைத் தடை செய்த நிலையில் தற்போது மத்திய அரசு தனது பார்வையை இந்தியாவில் செயல்படும் சீன பின்டெக் நிறுவனங்கள் மீது திருப்பியுள்ளது.

Recommended Video

மீண்டும் சீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா | Oneindia Tamil

இந்தியாவில் செயல்படும் தனிநபர் கடன் சேவைகளை அளிக்கும் செயலிகளான ஸ்னாப்இட், ப்பிள் லோன், கோ கேஷ், பிளிப் கேஷ் போன்ற 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது விசாரணை துவங்க உள்ளது. மத்திய அரசின் உத்தரவின் படி அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு ஆகியவை விசாரணை செய்ய உள்ளது.

ரேசர்பே மற்றும் பேடிஎம்

ரேசர்பே மற்றும் பேடிஎம்

இதுமட்டும் அல்லாமல் அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு இந்தியாவின் முன்னணி பேமெண்ட் கேட்வே ஆகத் திகழும் ரேசர்பே நிறுவனத்திற்குப் பட்டியலிட்டுள்ள 20க்கும் மேற்பட்ட சீன தனிநபர் கடன் சேவை செயலிகளின் பரிமாற்றங்களை ஏற்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாகவும், இதேபோல் பேடிஎம் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

சீன கடன் சேவை நிறுவனங்கள்

சீன கடன் சேவை நிறுவனங்கள்

மேலும் குறிப்பிட்டுள்ள சீன கடன் சேவை நிறுவனங்களின் கணக்குகளை முடக்கவும் ரேசர்பே மற்றும் இதர பேமெண்ட் கேட்வே நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தையும் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தவும், வர்த்தகத்தை முடக்கவும் அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு முடிவு செய்துள்ளது.

அமலாக்க துறை

அமலாக்க துறை

இந்திய பேமெண்ட் நிறுவனங்கள் இந்தச் சீன நிறுவனங்கள் மூலம் அதிக வர்த்தகம் மற்றும் வருவாய் கிடைக்கும் எனத் திட்டமிட்டுப் பல நிறுவனங்களைச் சேர்த்துள்ளது. முதல் இந்தச் சீன நிறுவனங்களில் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் குறித்த KYC பெற்று, பணம் பரிமாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அமலாக்க துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ரேசர்பே பதில்

ரேசர்பே பதில்

இதுகுறித்து ரேசர்பே கூறுகையில், அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு உத்தரவின் படி குறிப்பிட்ட சீன கணக்குகளை முடக்கியுள்ளோம், சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக அமலாக்க துறை தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளோம். மேலும் தற்போது அமலாக்க துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு எடுக்கும் நடவடிக்கை அனைத்தும் சீன செயலிகள் மீதானது, ரேசர்பே மீதானது அல்ல எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் ரேசர்பே சுமார் 300 முதல் 400க்கும் அதிகமான செயலிகளின் கணக்கை மூடியுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+