சிங்கப்பூருக்கு படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 128 சீன நிறுவனங்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே அவர்களை அமெரிக்க பங்குச்சந்தைகளிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் உங்கள் நிறுவனம் பட்டியிலடப்பட வேண்டும் என்றால், அதற்கு சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய நிபந்தனை

முக்கிய நிபந்தனை

சீன எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான நியோ, அமெரிக்க பங்குச்சந்தையில் தங்களது நிறுவனம் தொடர்ந்து பட்டியிலிடப்பட வேண்டும் என்றால் உடனே தலைமை அலுவலகத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றுங்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

எத்தனை நிறுவனங்கள்

எத்தனை நிறுவனங்கள்

128 சீன நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் 105 தற்காலிக பட்டியலில் மற்றும் 23 உறுதியான பட்டியலில் உள்ள நிறுவனங்கள் என கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து செயல்பட்டு வருகின்றன.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

முதற்கட்டமாக 80 சீன நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் இருந்து நீக்குவது குறித்து அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவத்தனை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் சீனாவின் JD.com, China Petroleum & Chemical Corp, JinkoSolar, Pinduoduo, Bilibili, electric maker NIO Inc மற்றும் NetEase உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.

வெளிநாட்டு நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் சட்டம்

வெளிநாட்டு நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் சட்டம்

2020-ம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் பல வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் சட்டத்தை இயற்ற வேண்டும் என திட்டமிட்டது. அது இப்போது வெற்றிகரமாக அமலுக்கு வந்துள்ளது எனவே பல்வேறு சீன நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் நிபந்தனைகளையும் விதிக்கப்பட்டு வருகிறது.

JD.com

JD.com

சீனா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கிதான் நாங்கள் வணிகம் செய்து வருகிறோம். Nasdaq மற்றும் Hong Kong Stock Exchange இரண்டிலும் அதன் பட்டியலிடப்பட்ட நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை நாங்கள் தொடருவோம் என சீன இ-காமர்ஸ் நிறுவனமான JD.com கூறியுள்ளது.

ஆனால் பல அமெரிக்க நிறுவனங்கள் ஏன் நாம் நம்முடைய தலைமை அலுவலகத்தைச் சிங்கப்பூருக்கு மாற்றக்கூடாது என திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese firms rush to Singapore, amid US delisting threat

Chinese firms rush to Singapore, HK bourses amid US delisting threat | சிங்கப்பூருக்குப் படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன காரணம்?
Story first published: Friday, May 6, 2022, 21:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X