சமூகவலைத்தளம் மற்றும் பொழுதுபோக்குப் பிரிவில் பெகும் புரட்சியைச் செய்த ஒரு நிறுவனம் டிக்டாக். இதன் வளர்ச்சியைப் பார்த்து யூடியூப், பேஸ்புக் எல்லாம் மிரண்டு போனது இன்றளவும் மறக்க முடியாது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் ஆதிக்கத்துடன் தொடர்ந்து செயல்படுகிறது.
டிக்டாக் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் இந்தச் செயலி சீனா மற்றும் ஹாங்காங்-ல் Douyin என்ற பெயரில் தான் இயங்கி வருகிறது. இவ்விரு சந்தையில் பதிவான வளர்ச்சி, வருவாய் தான் உலகின் பிற நாடுகளில் இதை விரிவாக்கம் செய்ய அடிப்படையாக அமைந்தது.

டிக்டாக் மூலம் இந்தியாவில் பிரபலமானவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம், இதேபோல் யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக முடியாதவர்கள் அனைவரும் டிக்டாக் மூலம் பிரபலமானார்கள். டிக்டாக் தடைக்குப் பின்பு டிக்டாக் பிரபலங்கள் பலர் யூடியூப், இன்ஸ்டாகிராம்-ல் பிரபலமாக உள்ளனர்.
இதேபோல் சீனாவில் டிக்டாக் பதிப்பான Douyin தற்போது பொழுதுபோக்குத் தளமாக மட்டும் அல்லாமல் ஷாப்பிங், முதலீடு, கல்வி, கேமிங் எனப் பலவற்றுக்கும் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதில் பிரபலமானவர்கள் ஏராளம், இதிலும் குறிப்பாக Zheng Xiang Xiang என்பவரின் வளர்ச்சி சீன மக்களை மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் அனைத்து vlogger-களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Zheng Xiang Xiang தனது டிக்டாக் சேனலில் வெறும் மூன்று வினாடிகள் மட்டுமே பொருட்களைக் காட்டி ஒவ்வொரு வாரமும் 100 மில்லியன் யுவான், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.116 கோடி சம்பாதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி இன்ஃப்ளூயன்சர் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக லைவ் ஸ்ட்ரீமிங் இன்ஃப்ளூயன்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
ஜெங் சியாங் சியாங் தனது தனித்துவமான Dealpan முகபாவனைக்குப் பெயர்போனவர், இதனாலேயே சீனாவில் பெரிய அளவில் பிரபலமானவர். மேலும இவருடைய மின்னல் வேக விற்பனை நுட்பம் பல பிராண்டுகளை இவர் வீட்டு வாசலில் நிற்க வைக்கும் அளவுக்கு மாற்றியுள்ளது.
அவரது வைரல் வீடியோ ஒன்று, ஹெர்மேஸ் பிராண்டின் ஆரஞ்ச் நிறப் பெட்டிகள் நிறைந்த அறையில் நின்றுகொண்டு ஒவ்வொரு பொருளையும் வெறும் 3 நொடிகள் மட்டுமே காட்டுகிறார். இவருடைய வீடியோ வைரலாக முக்கியமான காரணம் அவர் எந்தப் பொருளையும் கூடுதலாக ப்ரோமோட் செய்வது இல்லை.
இணையத்தளத்தில் தற்போது வரும் விளம்பரங்கள், ப்ரோமோஷன்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் இவருடைய வீடியோவுக்குப் பலரும் ரசிகர்களாக மாறியுள்ளனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications