சீன பொருட்கள் தடை.. இந்தியாவுக்கு தான் பெரும் பிரச்சனை.. எச்சரிக்கும் மூத்த பொருளாதார நிபுணர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா எல்லையில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக, மக்கள் மத்தியில் சீன பொருட்கள் வேண்டாம், சீனா வேண்டாம் என்ற பரப்புரைகள் அதிகரித்து வருகின்றன.

 

இதனை ஊர்ஜூதப்படுத்தும் விதமாகவே பல அதிரடியான நடவடிக்கையினை பார்க்க முடிகிறது. இது ஒரு சாரர் நல்ல விஷயம் என்றும் கூறி வருகின்றனர்.

இது இப்படி எனில், மறுபுறம் ஒரு சாரர் சீனாவினை இந்தியா தவிர்த்தால், அது இந்தியாவுக்கு தான் நஷ்டம். ஏனெனில் சீனாவின் மொத்த வர்த்தகத்தில், இந்தியாவின் பங்கு என்பது மிக குறைவே. ஆக இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமையாது என்றும் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு தான் இழப்பு

இந்தியாவுக்கு தான் இழப்பு

ஆனால் இது இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். உதாரணத்திற்கு இன்று உலகளவில் மருந்து ஏற்றுமதியில் நாம் மூன்றாவது பெரிய நாடாக இருந்தாலும், அதற்கு முக்கிய காரணம் சீனா தான். ஏனெனில் அந்த மருந்து பொருட்களின் முக்கிய மூலதன பொருட்களை சீனாவில் தான் நாம் இறக்குமதி செய்கிறோம். ஆக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யாவிடில், அது இந்தியாவுக்கு தான் பெரும் இழப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

தற்போது சீனாவிற்கும் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் சற்று சுமூக நிலை ஏற்படும் விதமாக இருந்து வருகிறது. உண்மையில் இந்தியா சீனாவினை துண்டித்தால் என்ன நடக்கும் என்பது இது வரை குழப்பமாகவே உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் பதில் கூறும் வகையில் இடிக்கு அளித்த பேட்டியில் மூத்த பொருளாதார நிபுணர் சுவாமி நாதன் ஐயர் அதனை பற்றி கூறியுள்ளார்.

எதை தடை செய்யலாம்? செய்யக்கூடாது?
 

எதை தடை செய்யலாம்? செய்யக்கூடாது?

பலரும் கூறுவது போல், சீனாவிலிருந்து இறக்குமதியை தடை செய்தால், அதனால் என்ன பிரச்சனை வரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு கடுமையான ஒரு பதிலை கொடுக்க வேண்டும் தான். ஆனால் அது இப்படியல்ல. எதை தடை செய்ய முடியும். எதையெல்லாம் தடை செய்ய முடியாது என்பது தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இறக்குமதி தடை செய்யலாம்

இறக்குமதி தடை செய்யலாம்

குறிப்பாக சீனாவின் ஆப்கள், பட்டங்கள், மெழுகுவர்த்திகள், கடிகாரம், பொம்மைகள் உள்ளிட்டவற்றை தடை செய்வதில் பெரிதும் பிரச்சனை இல்லை. ஏனெனில் இதுபோன்ற நடவடிக்கைகள் இங்கு நுகர்வோர் விலையினைக் அதிகரிக்காது. ஏனெனில் இந்தியாவுக்கு வேறு வழிகளில் இதே போல விலைகளில் கிடைக்கின்றன.

இந்தியாவினை மோசமாக பாதிக்கும்

இந்தியாவினை மோசமாக பாதிக்கும்

ஆனால் இந்தியா மெஷினரி மற்றும் இடைநிலை பொருட்களை தடை செய்தால் அது இந்திய பொருளாதாரத்தினை தான் மிக மோசமாக பாதிக்கும். ஏனெனில் அதனை சீனாவின் விலையில் கொடுக்க யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சீன செயலிகள் தடை மற்றும் பொம்மைகள் தடை செய்வது, இந்தியாவை பொருளாதார ஏற்றம் கொண்ட நாடாக மாற்றாது.

சீனாவுக்கு பிரச்சனை இல்லை

சீனாவுக்கு பிரச்சனை இல்லை

எனினும் மெஷினரி மற்றும் இடை நிலை பொருட்களை தடை செய்தால், அது இந்தியாவின் நலன்களை பெரிதும் பாதிக்கும். ஆக சீனா இதுபோன்ற பொருட்களை தடை செய்தால், அதனை மற்ற நாடுகளுக்கு சீனா இறக்குமதி செய்யும். இதனால் சீனாவுக்கு பாதிப்பில்லை. இந்தியாவுக்கு தான் பாதிப்பு என்றும் கூறியுள்ளார்.

கசப்பான வரலாறு

கசப்பான வரலாறு

உதாரணத்திற்கு ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டால், சீனாவுடன் கசப்புடன் கூடிய நீண்ட கால வரலாற்றினைக் கொண்டுள்ளன. எனினும் அவர்கள் ஒரு போதும் சீனப் பொருட்களை தடை செய்யவில்லை. ஆக இந்தியா சீனாவுடன் போட்டிக்கு சென்றால், இந்தியா அதன் நிலையைத் தான் இழக்கும் என்றும் ஐயர் கூறியுள்ளார்.

இந்தியா பெரியளவில் செல்ல முடியாது

இந்தியா பெரியளவில் செல்ல முடியாது

நுகர்வோர் பொருட்களில் மாற்றம் இருக்கலாம். ஆனால் மூலதன பொருட்கள் அல்லது இடை நிலை பொருட்களைத் தொடாதீர்கள். இந்த கட்டத்தில் தான் இந்தியா இருக்க வேண்டும் என்றும் ஐயர் கூறியுள்ளார். சீனாவின் மின் சாதனங்கள், பேட்டரிகள், சோலார் பேனல்கள் இல்லாமல், இந்தியாவால் பெரியளவில் இந்த துறையில் செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு பொருட்கள்

பாதுகாப்பு பொருட்கள்

அதோடு பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தினையும் ஐயர் கூறினார். ஆனால் இந்தியாவும் சீனாவும் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தின் பல துறைகளில் பிரிக்க முடியாதவை என்றும் அவர் வலியுறுத்தினார். எங்களிடம் உள்ளதை போலவே சீனாவுக்கும் எதிரான குறைகளைக் கொண்ட பிற நாடுகளும் உள்ளன. ஆனால் அவை மேலே செல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாமும் செல்லக்கூடாது என்றும் ஐயர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese machinery or intermediate goods ban will hurt the Indian economy deeply

#boycottchina goods.. Chinese machinery or intermediate goods ban will hurt the Indian economy deeply.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X