இன்றைய சூழலில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்கத்தை அறிவித்து வருகின்றன. அப்படி பணி நீக்கம் செய்யப்படுவதற்கு நிறுவனங்களின் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் தங்களுடைய நிறுவன வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு நிறுவனத்தின் செலவுகளை குறைப்பது, செயல்பாடுகளை மேம்படுத்துவது என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வினோதமாக வேலை நேரத்தில் சற்று உறங்கியதற்காக ஒருவரை பணிநீக்கம் செய்தது. இந்த பணி நீக்கத்தால் விரத்தியடைந்த அந்த நபர் நீதிமன்றத்தின் மூலம் நிறுவனத்திடம் இருந்து ரூ.40 லட்ச ரூபாய் இழப்பீடாகப் பெற்றுள்ளார்.
ஜாங் என்ற நபர் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைக்ஸிங்கில் இருக்கும் ரசாயன நிறுவனத்தில் 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த வருட தொடக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு மணி நேரம் தூங்கியதற்காக ஜாங் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஜாங் முதல் நாள் நள்ளிரவு வரை பணிபுரிந்த காரணத்தினால் மறுநாள் ஒரு மணி நேரம் உறங்கியுள்ளார். இவர் உறங்குவது கண்காணிப்பு கேமராவில் தெள்ளத் தெளிவாக பதிவானது.

2 வாரங்களுக்கு பிறகு நிறுவன தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஜாங் நிறுவனத்தின் ஜீரோ டாலரன்ஸ் பாலிசியை மீறுவதாக அறிவித்தனர். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன்ஸ் இருக்கும். இவற்றை மீறுபவர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வது வழக்கம். அப்படி இந்த நிறுவனத்தில் தூங்குவதை கடுமையான விதிமீறல் என்று கூறி நிறுவனம் தொழிற்சங்கத்துடனான ஆலோசனையை முடித்து.. ஜாங்கை பணி நீக்கம் செய்தது. இந்த பணி நீக்கத்தை ஏற்க விரும்பாத ஜாங் நடந்த விஷயம் குறித்து தீர்வுக் காண நீதிமன்றத்தை அணுகினார்.
டெய்க்சிங் மக்கள் நீதிமன்றம் தூங்கியதற்கு பணி நீக்கம் செய்ததை அதிகபட்ச தண்டனையாக கண்டறிந்தது. SCMP அறிக்கையின்படி நீதிபதியான ஜூ க்யூ நிறுவனங்களுக்கு தங்கள் சொந்த விதிகளை செயல்படுத்த உரிமை இருந்தாலும், பணிநீக்கம் செய்வதற்கு என்று குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளன. ஒரு வேலை நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தினாலோ அல்லது முதலாளிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தினாலோ பணி நீக்கம் செய்யப்படலாம். ஆனால் வேலையின் போது உறங்கியது அவ்வளவு பெரிய தவறில்லை. இதனால் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று நீதிபதி கூறினார்.
தூங்கியதற்காக பணிநீக்கம் செய்வது நியாயமற்றது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் நிறுவனத்திடம் இழப்பீடாக ஜாங்கிற்க்கு 3,50,000 யுவான் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.40 லட்சம்.
இந்தச் சம்பவம் நியாயமான விதிமுறைகள் மற்றும் ஊழியர்களின் நலனை பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அதிக வேலை பளுவின் காரணமாக ஏற்படும் சிறு தவறுகளை மனிதாபிமான அடிப்படையில் கையாள்வது அவசியம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications