இந்திய மண்ணில் சீனா ஆதிக்கம்.. 80% சந்தை "இவர்கள்" கையில் தான்..!

இந்தியா - சீனா இடையே தற்போது எல்லை பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில், இரு நாடுகள் மத்தியிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக இந்திய அரசு 59 சீன ஆப்-களைப் பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக மக்கள் பயன்படுத்துவதற்குத் தடை செய்த நிலையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் வர்த்தகம் செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் வரை பல்வேறு துறையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆச்சரியப்படும் அளவிற்குச் சீன இந்தியா மண்ணில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியாவில் விற்பனை ஆகும் 5ல் 4 ஸ்மார்ட்போன்கள் சீன தயாரிப்பு என்பது எத்தனை பேருக்கு தெரியும். வாங்க எந்தெந்த நிறுவனம் எவ்வளவு சந்தையை வைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

சியோமி

சியோமி

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் குறைந்த காலத்தில் நம்பர் 1 நிறுவனமாக வளர்ந்துள்ளது சியோமி. இந்தியாவின் சுமார் 30 சதவீத ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைச் சியோமி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை பிரிவில் இந்நிறுவனத்தின் ஆதிக்கம் மிகவும் அதிகம்.

இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பெரும்பாலும் 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் தான் உள்ளது. சியோமி தற்போது ஸ்மார்ட்போன் வெற்றியைத் தொடர்ந்து புதிதாக 2 மாடல் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

 

விவோ

விவோ

ஒவ்வொரு வருடமும் சுமார் 40 சதவீத வளர்ச்சியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விவோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 17 சதவீத சந்தையைப் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் கேமரா மையப்படுத்தி இருப்பதால் மக்கள் மத்தியில் விவோ போன்களுக்கு மிகப்பெரிய வரவேப்பு உள்ளது.

 

ரியல்மி

ரியல்மி

சியோமியின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என மற்றொரு சீன நிறுவனமான oppo-வின் துணை பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி தற்போது இந்திய சந்தையில் தனிப் பிராண்டாகவே சிறந்து விளங்குகிறது. வருடத்திற்கு 119 சதவீத வளர்ச்சியை அடைந்தது வரும் ரியல்மி இந்திய சந்தையில் சுமார் 14 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

 ஓப்போ

ஓப்போ

BBK எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிறுவனமான ஓப்போ 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 12 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.

BBK எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் ரியல்மி, ஓப்போ, விவோ, ஓன்பிளஸ், iQOO ஆகிய பிரண்டுகள் உள்ளது. இந்த 4 நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், தயாரிப்பு அனைத்தும் BBK நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

 

Transsion குரூப்

Transsion குரூப்

இந்தியாவில் பட்ஜெட் விலைக்கும் குறைவான விலையில் பல சீன தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பிரிவில் சீனாவில் Transsion குரூப் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை சுமார் 78 சதவீத வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Itel, Infinix மற்றும் Tecno ஆகிய பிராண்டு போன்கள் அனைத்தும் Transsion குரூப் நிறுவன தயாரிப்புகள் தான்.

 

போகோ

போகோ

சியோமியின் துணை பிராண்டாக இருந்த போகோ தற்போது தனிப் பிராண்டாக இயங்க துவங்கிய நிலையில் முதல் காலாண்டிலேயே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 2 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது போகோ

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

இந்திய இளைஞர்கள் மத்தியில் ஒன்பிளஸ் போன்களுக்கு மிகப்பெரிய மதிப்பும், வரவேற்பும் ஆரம்பம் முதலே உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் ப்ரீமியம் போன்கள் என்பதால் இது ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்நிறுவனம் சுமார் 33 சதவீத சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்தியாவில் ப்ரீமியம் பிரிவில் 20 லட்ச போன்களை விற்பனை செய்த ஒரே நிறுவனம் ஒன்பிளஸ் தான், அதுவும் ஓரே வருடத்தில்.

 

பிற நாட்டு நிறுவனங்கள்

பிற நாட்டு நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சாம்சங் நிறுவனம் சுமார் 16 சதவீத சந்தையைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

மலிவு விலை போன், பட்ஜெட் போன், ப்ரீமியம் போன் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் சீன நிறுவனங்கள் மொத்தம் 80 சதவீத சந்தையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்கிறது.

சீன பொருட்களையும், தயாரிப்புகளையும், எதிர்ப்பதும், தவிர்ப்பதும் எளிது ஆனால் இதற்கு மாறாக இந்திய தயாரிப்பு உள்ளதா என்பது தான் தற்போதைய கேள்வி.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+