இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில் 5ஜி போன்களுக்கும் மற்ற எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்பனையிலும் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் சில முக்கியக் காரணத்திற்காகச் சீன நிறுவனங்கள் அடுத்த ஒரு வருடத்திற்கான திட்டத்திலும், செலவுகளிலும் Pause பட்டனை அமுக்கியுள்ளது. ஏன் இந்தத் திடீர் முடிவு..?!
பொருளாதார மந்தநிலை
சர்வதேச பொருளாதார மந்தநிலை அனைத்து துறைகளையும், வர்த்தகத்தையும் பாதிக்கத் துவங்கிய நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் எனப் பல தரப்பினர்கள் கணித்துள்ளனர். இதனால் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் அடுத்த ஒரு வருடத்தில் ஏற்படப்போகும் தடுமாற்றத்தைச் சமாளிக்கப் பல நடவடிக்கையை எடுத்து வருகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்திற்காகவும், இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்குமான டிமாண்ட் பெரிய அளவில் குறையும் என்பதாலும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மத்திய அரசு கட்டம் கட்டி பல நெருக்கடிகளை அளித்து வரும் காரணத்திற்காகவும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், தற்போது கூறப்பட்டு உள்ள காரணத்தால் அடுத்த வருடத்திற்கான மார்கெட்டிங் மற்றும் அப்ரேஷன்ஸ் பிரிவுக்கான செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் - நவம்பர் மாதம்
பொதுவாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அடுத்த வருடத்திற்கான திட்டத்தை அக்டோபர் - நவம்பர் மாதம் தீட்டும். தற்போது சீன நிறுவனங்களுக்குப் பல நிரந்தரமற்ற தன்மைகள் இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் எந்த வகையிலான மார்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் செலவினங்களைத் திட்டமிடுவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்
இந்த நிலையில் 2023ல் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, உதாரணமாக ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 14 மாடல் போனின் உற்பத்தி அளவை தொடர்ந்து குறைத்து வருகிறது. இதேபோல் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக எண்ணிக்கையைக் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
டிமாண்ட்
2022ல் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வர்த்தகம் குறைந்தது மட்டும் அல்லாமல் டிமாண்ட் அளவும் பெரிய அளவில் குறைந்தது. இதனால் லாபம் அளவுகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் செலவுகள் குறைப்பு முதல் ஊழியர்கள் பணிநீக்கம் வரையில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சியோமி, ஓப்போ, விவோ, ரியல்மீ
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி, ஓப்போ, விவோ, ரியல்மீ ஆகிய சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமே சுமார் 80 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது, இதனால் இந்நிறுவனங்கள் எடுக்கும் முடிவு அனைத்தும் சந்தையைக் கடுமையாகப் பாதிக்கும்.
சீனா
சீனாவில் உற்பத்தி அளவுகள் பாதிக்கப்பட்ட நிலையில் சந்தையில் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆனால் 2023ல் டிமாண்ட் மோசமாக இருக்கும் காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications