பகீர் கிளப்பும் சீன முதலீடுகள்! 4 வருடத்தில் 12 மடங்கு அதிகரிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய எல்லையை நமக்காக பாதுகாக்கும் ராணுவ வீரர்களை, சீன ராணுவத்தினர்கள் தாக்கியது , இந்திய மக்கள் மத்தியில், மிக பெரிய அதிருப்தியை கிளப்பி இருக்கிறது.

 

இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததை, இந்திய மக்களால் இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த கோபத்தின் வெளிப்பாடாக சீன பொருட்களை புறக்கணிப்பது, ஒரு புதிய டிரெண்டாக உருவெடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் அதற்கு முன், சீனா செய்திருக்கும் காரியத்தைப் பார்த்தால் நமக்கே கொஞ்சம் பகீர் என்று தான் இருக்கிறது.

சீன முதலீடுகள்

சீன முதலீடுகள்

இந்தியாவில் சீனர்கள் முதலீடு (இந்தியாவின் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில்) செய்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 4.6 பில்லியன் டாலர். இது 2019-ம் ஆண்டு கணக்கு. 2019-ம் ஆண்டுக்கு முன்பு எல்லாம் இத்தனை அதிகம் முதலீடுகளை, சீனா செய்யவில்லை என்பது தான் உண்மை.

கடந்த காலத்தில் எவ்வளவு?

கடந்த காலத்தில் எவ்வளவு?

நான்கு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2016-ம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த மொத்த முதலீடே 381 மில்லியன் டாலர் தான். ஆனால் 2019-ம் ஆண்டில் 4.6 பில்லியன் டாலர். ஆக கடந்த நான்கு ஆண்டுகளில், சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு வந்த முதலீட்டுத் தொகை சுமாராக 12 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஸ்டார்ட் அப் கம்பெனிகள்
 

ஸ்டார்ட் அப் கம்பெனிகள்

"யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள்" என்கிற ஒரு வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பீடு 1 பில்லியன் டாலருக்கு மேல் போனால், அதை யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனி என்பார்கள். அப்படி இந்தியாவில், முக்கியமாக 24 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இருக்கின்றன.

24-ல் 17 கம்பெனிகளில் சீனர்கள்

24-ல் 17 கம்பெனிகளில் சீனர்கள்

இந்த 24 முக்கிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் 17, கம்பெனிகள், சீனர்களிடம் இருந்து ஃபண்டிங் பெற்றவைகள். பேடிஎம், ஸ்நாப் டீல், பிக் பாஸ்கெட், சொமேட்டோ, ஓலா, ஸ்விக்கி, ஹைக், ட்ரீம் 11, பைஜூ என பட்டியல் நீள்கிறது. சீன முதலீடுகளில் குறிப்பாக, அலிபாபா மற்றும் டென்செண்ட் என்கிற இரண்டு பெரிய நிறுவனங்களில் இருந்து தான் அதிகம் வந்திருக்கின்றனவாம்.

யார் எதில் முதலீடு

யார் எதில் முதலீடு

அலிபாபா மற்றும் அதனோடு தொடர்புடைய ஆண்ட் ஃபைனான்ஷியல் கம்பெனி எல்லாம் சேர்ந்து, இந்தியாவின் பேடிஎம், ஸ்நாப் டீல், பிக் பாஸ்கெட், சொமேட்டோ போன்ற கம்பெனிகளில் 2.6 பில்லியன் டாலர் முதலீடு செய்து இருக்கிறார்களாம். டென்செண்ட் கம்பெனி மற்றும் அதனோடு தொடர்புடைய கம்பெனிகள், ஓலா, ஸ்விக்கி, ஹைக், ட்ரீம் 11, பைஜூ போன்ற கம்பெனிகளில் 2.4 பில்லியன் டாலர் முதலீடு செய்து இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

chinese start up investments in india surged 12 times in 4 years

Chinese investments in India start up companies surged 12 times in 4 years. The Chinese invested indian start up company list includes Ola, paytm, Swiggy.
Story first published: Saturday, June 27, 2020, 14:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X