சீன மக்களுக்கு விரைவாக விசா.. பறந்தது கோரிக்கை, நடக்குமா..? வெளியுறவு அமைச்சகம் பதில் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல முன்னணி ஏற்றுமதியாளர்கள் இந்தியாவில் தொழில்சாலை அமைக்கவும், நவீன மெஷின்களை வேகமாக நிறுவ வேண்டும் என்பதற்காகவும் சீன டெக்னீஷியன்களையும், இன்ஜினியர்களையும், இந்தியாவுக்கு வரவழைக்க அவர்களுக்கான விசா வழங்கும் முறையை வேகப்படுத்த ஏற்றுமதியாளர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஏற்றுமதியாளர்களின் இந்த கோரிக்கையை முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் கருதும் மத்திய அமைச்சகம் இக்கோரிக்கைய மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கொண்டு சென்றுள்ளது. இதற்கான முடிவும், நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது, காரணம் இந்தியா தற்போது உற்பத்தியும், ஏற்றுமதியும் தான் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.

சீன மக்களுக்கு விரைவாக விசா.. பறந்தது கோரிக்கை, நடக்குமா..? வெளியுறவு அமைச்சகம் பதில் என்ன..?

இந்தியாவில் பல துறைகளில் சிறந்த திறன் மற்றும் அனுபவம் கொண்ட டெக்னிஷன்கள் புதிய தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்களை அமைக்கும் போதும் மிகவும் அவசியமாக உள்ளனர். இதில் பல பிரிவு டெக்னிஷன்கள் வெளிநாட்டில் இருந்து வரவேண்டியுள்ளது.

இந்த நிலையில் சீன டெக்னீஷியன்களையும், இன்ஜினியர்களையும் இந்தியாவுக்கு வரவழைக்க அவர்களுக்கான விசா வழங்கும் முறையை வேகப்படுத்த ஏற்றுமதியாளர்கள் வைத்த கோரிக்கை நாட்டின் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் முக்கியமானதாக உள்ளது. எனவே தான் இந்த கோரிக்கையை மத்திய வெளியுறவு விவகார துறை அமைச்சகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீன மக்களுக்கு விரைவாக விசா.. பறந்தது கோரிக்கை, நடக்குமா..? வெளியுறவு அமைச்சகம் பதில் என்ன..?

சீன டெக்னீஷியன்களையும், இன்ஜினியர்களையும் விசா வழங்குவதில் தாமதமாகும் காரணத்தால் அதிகம் பாதிக்கப்படும் முக்கியமான துறைகளில் தோல் அல்லாத காலணிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிக்க இந்தியாவில் தொழில்சாலைகள் திட்டமிட்டு உள்ள நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த தாமதத்தால் இத்துறை தொழிற்சாலைகள் அதன் பணியை துவங்க முடியாமல் உள்ளது.

இதோடு மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் இந்தியாவில் இருக்கும் சிறிய வர்த்தக அமைப்புகள், ஏற்றுமதி ஆதரவு திட்டங்களின் கீழ் செலுத்த வேண்டிய கடன் தொகையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்துவதற்குப் பதிலாக தவணை முறையில் சிறிய யூனிட்கள் தங்கள் கடன்களை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை இந்த அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china visa சீனா விசா
English summary

Chinese technicians need faster visas; New request from Exporters - external affairs ministry will take decision

Chinese technicians need faster visas; New request from Exporters - external affairs ministry will take decision
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X