பெய்ஜிங், சீனா: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நாம் பயன்படுத்தும் பல கருவிகளிலும் ஏஐ தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது நாள் வரை அமெரிக்க நிறுவனங்களே இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடியை அறிமுகம் செய்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன்களை உலகிற்கு எடுத்து காட்டியது. அதனை தொடர்ந்து கூகுளின் ஜெமினி, எலான் மஸ்கின் கிராக் ஆகிய ஏஐ செயலிகளும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கிய ஏஐ செயலிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் சீனா டீப்சீக் செயலியை அறிமுகம் செய்தது. இது சாட் ஜிபிடி உள்ளிட்ட செயலிகளை விட அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கிறது.

உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் ஒரு செயலியாக டீப்சீக் மாறி இருக்கிறது. சீனாவை பொறுத்தவரை பல்வேறு சாதனங்களிலும் டீப்சீக் ஏஐ ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக மின்னணு சாதனங்களில் எல்லாம் டீப்சீக் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவில் வீட்டு உபயோக சாதனங்களை விற்பனை செய்யக்கூடிய ஹையர் , ஹை சென்ஸ், டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் டீப்சீக் செயலியை ஒருங்கிணைத்து புதிய மாடல் டிவி, ஃபிரிட்ஜ்கள் மற்றும் ரோபோ வேக்யூம் கிளீனர்களை தயாரிக்கின்றன. ஏற்கனவே சீனாவின் ஹூவேய் மற்றும் டென்செண்ட் நிறுவனங்கள் தங்கள் கருவிகளில் டீப்சீக் ஏஐ வசதி கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.
எனவே குரல் கட்டளைகளை ஏற்று இந்த கருவிகள் தானாகவே செயல்படும்.அதாவது அனைத்து வகையான மக்களும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் டீப்சீக் தொழில்நுட்பம் இதில் இணைக்கப்படுகிறது. உதாரணமாக ரோபோ வேக்யூம் கிளினர்களுக்கு வீட்டை சுத்தம் செய் என நாம் கட்டளையிட்டால் அது சுத்தம் செய்து விடும், அதுவே டீப்சீக் ஒருங்கிணைக்கப்பட்ட கருவியிடம் வீட்டை சுத்தம் செய்துவிடு ஆனால் பொம்மைகள் இருக்கும் பகுதியை அப்படியே விட்டுவிடு என கூறினால் அதை அப்படியே நிறைவேற்றுமாம். அதாவது சிக்கலான கட்டளைகளை கூட எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டதாக மாறுகின்றன.
டீப் சீக் இணைக்கப்பட்ட கருவிகள் அதிக வேகத்துடன் நுணுக்கமாகவும் செயல்படுகின்றன என இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே சீனாவில் டீப் சீக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போவது உறுதியாகியுள்ளது.இதனிடையே டீப்சீக் செயலியின் ஆர்1 மாடல் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட மாடலான ஆர்2 விரைவில் வெளியாகும் என டீப் சீக் நிறுவனர் லியாங் வென்ஃபெங் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications