சர்வதேச அளவில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லா-வை ஓரம்கட்டி சீனாவின் BYD முதல் இடத்தைப் பெறும் வேளையில், உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சியோமி இன்று புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
சியோமி SU7 என்ற பெயரில் புதிய செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் SU என்பதற்கான விரிவாக்கம் Speed Ultra, இந்தப் பெயரை வைக்க முக்கியக் காரணம், இக்கார்களில் இருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் டெஸ்லா மற்றும் போர்ஷே கார்களின் மோட்டார்களைக் காட்டிலும் வேகமாக இயங்க கூடியவை எனச் சியோமி சிஇஓ லேயூ ஜூன் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் அடுத்த 15-20 வருடத்தில் உலகின் டாப் 5 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இடம்பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சியோமி எப்படித் தனது பொருட்களின் விலையைக் குறைத்து அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறதோ, இதேபோன்ற மேஜிக்-ஐ எலக்ட்ரிக் கார்களிலும் செய்ய உள்ளது.
எலக்ட்ரிக் கார்களைப் பொருத்த வரையில் மைலேஜ் வைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. சியோமி அறிமுகம் செய்துள்ள SU7 கார் இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்துள்ளது, இதில் முதல் வெர்ஷன் 668 கிலோமீட்டர் வரையில் பயணிக்கும் திறன் கொண்டது. மற்றொரு மாடல் 800 கிலோமீட்டர் வரையில் பயணிக்கக் கூடியது.
டெஸ்லா கார்கள் அதிகப்படியாக 650 கிலோமீட்டர் வரையில் மட்டுமே செல்லக்கூடும். மேலும் கார்களின் விலை ஆரம்பக்கட்டத்தில் சற்று அதிகமாகவே இருந்தாலும், கொடுக்கும் காரின் திறனுக்குப் பார்த்தால் விலை சரியானதாக இருக்கும் எனச் சியோமி சிஇஓ லேயூ ஜூன் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் அமெரிக்காவின் டெஸ்லா-வை மொத்தமாக அடித்து ஒடுக்க ஒட்டுமொத்த சீனா களமிறங்கியுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சீனா நிறுவனங்கள் செருப்பு முதல் ஸ்மார்ட்போன் வரையிலான உற்பத்தியில் முன்னோடியாக இருந்த நிலையில் ஆட்டோமொபைல் துறையில் தனக்கான இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்த போதுதான் MG MOTOR மற்றும் VOLVO பிராண்டுகள் திட்டமிட்டு கைப்பற்றிச் சர்வதேச ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்தது.
இந்த நேரத்தில் தான் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திய மொத்த ஆட்டத்தையும் கலைத்தார் எலான் மஸ்க், சீனாவின் நல்ல நேரம் டெஸ்லாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை சீனாவில் அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யத் துவங்கிய நிலையில், பெட்ரோல் / டீசல் வாகனங்களைப் போல் இன்ஜின் தயாரிப்பு, ஆட்டோமொபைல் துறையில் நீண்ட வரலாறு எல்லாம் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்குத் தேவையில்லை என்பது நிரூபணமானது.
இதைத் தொடர்ந்து சீனாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கிய செப்டம்பர் மாதம் தனது முதல் காரான Aito M7 SUV-ஐ அறிமுகம் செய்த நிலையில் சுமார் 80000 கார்களுக்குப் புக்கிங் குவிந்துள்ளது. இதைத் தொடர்ந்து Avatr 12 luxury coupe மற்றும் Luxeed S7 sedan ஆகிய இரு கார்களை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் சந்தையின் போக்கை மாற்றியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications