ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன் பயன்பாடும், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் இத்துறை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டி உள்ளது.
இந்தப் போட்டியில் யார் முதல் இடத்தை பிடிப்பது என்பது சீனா, கொரியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் எப்போதும் இருக்கும், ஆனால் இந்த லாக்டவுன் காலத்தில் இந்தப் போட்டி மிகவும் அதிகமாகியுள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டில் முடங்கிய காரணத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆன்லைன் கல்வி, வீட்டில் இருந்து வேலை, ஆன்லைன் வர்த்தகம் எனப் பல காரணத்திற்காக மக்கள் ஸ்மார்ட்போன் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் நிறுவனங்களும் அதிகளவிலான வர்த்தகம் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை
ஸ்மார்ட்போன் சந்தையின் வர்த்தகம் தொடர்ந்து குறையாமல் இருந்த காரணத்தால் ஜூன் காலாண்டில் மிகப்பெரிய வர்த்தகம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆம் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தைப் பட்ஜெட் போன் தயாரிக்கும் நிறுவனமான சியோமி முந்தியுள்ளது.
சீன நிறுவனம்
ஏப்ரல் - ஜூன் 2021 காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வர்த்தகம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வர்த்தகத்தில் பெரும் பகுதி சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி கைப்பற்றித் தற்போது உலகின் 2வது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சாம்சங் நிறுவனம்
கனலைசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி ஜூன் காலாண்டு முடிவில் சாம்சங் 15 சதவீத வர்த்தக வளர்ச்சியில் 19 சதவீத சந்தையைக் கைப்பற்றி உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சியோமி மற்றும் ஆப்பிள்
இதைத் தொடர்ந்து 83 சதவீத உயர்வில் சியோமி நிறுவனம் 17 சதவீத சந்தையைப் பிடித்து உலகின் 2வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 3வது இடத்தில் ஆப்பிள் வெறும் 1 சதவீத வளர்ச்சியில் 14 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஓப்போ, வீவோ ஆகிய நிறுவனங்கள் 4வது மற்றும் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications