இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைவாய்ப்புக்காகவும், தொழில் ரீதியாகவும், சுற்றுலாவுக்காகவும் பயணம் செய்கிறார்கள். இந்தியாவிலிருந்து நாம் வேறு ஒரு நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டுமென்றால் நம்மிடம் பாஸ்போர்ட் இருப்பது கட்டாயம்.
நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது இவ்வகை பாஸ்போர்ட்டுகள் இ-பாஸ்போர்ட் (e-passport) என அழைக்கப்படுகின்றன. நீங்கள் துபாய்க்கு அடிக்கடி சென்று வரக்கூடிய நபர் அல்லது கூடிய விரைவில் துபாய்க்கு செல்லும் திட்டம் இருக்கிறது என்றால் உங்களுடைய பாஸ்போர்ட்டை, இ-பாஸ்போர்டாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.

இதன் மூலம் உங்களுடைய பயணம் பாதுகாப்பானதாக மாறும் , விமான நிலைய பரிசோதனை மற்றும் குடியேற்ற ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் இ பாஸ்போர்ட் மிக எளிமையானதாக மாற்றிவிடும். அதாவது இ-பாஸ்போர்ட் இருந்தால் நீங்கள் இமிகிரேஷனில் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே ஐக்கிய அரபு அமீரகத்துக்குள்ளேயே பயணம் செய்தாலும் சரி இந்தியா வந்து சென்றாலும் சரி உங்கள் பயணம் நிம்மதியாக அமையும்.
பாரம்பரியமான பாஸ்போர்ட்களுக்கு மாற்றாக தான் மத்திய அரசு இந்த இ -பாஸ்போர்ட்டுகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த பாஸ்போர்ட்டில் ஆர்எஃப்ஐடி முறையில் சிப்புகள் பொருத்தப்பட்டுள்ளன, பாஸ்போர்ட்டின் முகப்பு பக்கத்தில் இந்த சிப்புகள் இருக்கும். அந்த பாஸ்போர்ட்டுக்கு உரிய நபரின் பயோமெட்ரிக் தரவுகள் அதாவது அந்த நபரின் புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவை சேமிக்கப்பட்டிருக்கும்.

உலகம் முழுவதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வகையிலான ஒரு பாஸ்போர்ட் இது. இந்த பாஸ்போர்ட் இருந்தால் பல்வேறு நாடுகளிலும் விமான நிலையங்களில் உங்களுடைய தகவல்கள் சரிபார்ப்பு பணிகள் மிக எளிமையாக முடிந்துவிடும். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தற்போது இ -பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அல்லது துபாயில் இருக்கக்கூடிய தூதரகத்திற்கு சென்று இ பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஜிபிஎஸ்பி 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்த புதிய இபாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பாஸ்போர்ட் இருந்தால் இமிகிரேஷனில் நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தானியங்கி ஐ கேட் அல்லது இ - கேட்கள் வாயிலாக நீங்கள் சென்றால் ஆட்டோமேட்டிக்காக உங்கள் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு விடும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த வசதி இருக்கிறது என்பதால் நீங்கள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நேரத்தில் 25 நிமிடங்கள் சேமிக்க முடியும். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவின் இ-பாஸ்போர்ட்டுகளுக்கு பெரிய அளவில் எந்த ஒரு பாதுகாப்பு சோதனையும் நடத்தப்படுவது கிடையாது.
இதில் பயோமெட்ரிக் தரவுகள் இருப்பதால் யாராலும் அதனை வைத்து போலியான பாஸ்போர்ட்டை உருவாக்க முடியாது. எனவே உலக அளவில் பாதுகாப்பு தர நிலையில் இந்தியாவின் பாஸ்போர்ட் முன்னிலை பெறுகிறது. இ- பாஸ்போர்ட் வந்துவிட்டதால் வந்துவிட்டால் பழைய பாஸ்போர்ட் செல்லாதா என்ற சந்தேகம் எழக் கூடும். ஆனால் உங்களுடைய பழைய பாஸ்போர்ட் தொடர்ந்து செல்லும் என்கிறது மத்திய அரசு.
உங்களுடைய பழைய பாஸ்போர்ட் எந்த தேதியில் முதிர்வு பெறுகிறதோ அந்த தேதி வரை அது தொடர்ந்து செல்லும் என மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இருந்தாலும் இந்த இ-பாஸ்போர்ட் வாங்கி கொண்டால் உங்களின் பயணங்கள் எளிதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் பின்வரும் https://mportal.passportindia.gov.in/gpsp/AuthNavigation/Login இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு உரிய ஆவணங்களை அப்லோடு செய்து கொள்ளலாம். இதனை அடுத்து அபுதாபி மற்றும் துபாயில் உள்ள இந்திய தூதரகங்களில் உங்களுக்கு அப்பாயின்மென்ட் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நாளில் சென்று சரிபார்ப்புகளை முடித்துக் கொண்டு உங்களுக்கான ஈ பாஸ்போர்ட்டை பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications