குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சினிமா தியேட்டர் கேண்டீனில் சந்துபாய் சகோதரர்களால் பிழைப்புக்காக தொடங்கப்பட்ட சிப்ஸ் வியாபாரம் இன்று நாட்டின் முன்னணி விற்பனை நிறுவனமான பாலாஜி வேஃபர்ஸாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ரூ.43,800 கோடி மதிப்பிலான உப்பு தின்பண்ட சந்தையில் 12 சதவீத சந்தை பங்களிப்புடன் பாலாஜி வேஃபர்ஸ் 3வது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் 21 சதவீத சந்தை பங்குடன் ஹல்திராம் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் 15 சதவீத சந்தை பங்குடன் பெப்சிகோ நிறுனமும் உள்ளன. ஹல்திராம் மற்றும் பெப்சிகோ நிறுவனங்கள் நாடு முழுவதும் வர்த்தகத்தை கொண்டுள்ளன. ஆனால் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்பட 12க்கு குறைவான மாநிலங்களில் மட்டுமே வர்த்தகம் செய்கிறது.

குறைவான மாநிலங்களில் வர்த்தகம் செய்தாலும் தனது சந்தையை பலமாக வைத்துள்ளது. இதனால் பெப்சிகோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நிறுவனத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசைப்பட்டன.
பாலாஜி நிறுவனத்தின் ஒரு பிராண்ட், பெப்சிகோவின் லேஸ் மற்றும் குர்குரே உள்ளிட்ட எந்த பிராண்டுகளையும் விட பெரியதாகும். இந்நிறுவனம் தற்போது விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக ரூ.5,000 கோடியை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பாலாஜி வேஃபர்ஸ் வருவாயாக ரூ.5,010 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.4,034 கோடியாக இருந்தது.
பூஜியா, உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் நம்கீன்கள் ஆகிய குறைந்த தயாரிப்புகள் மற்றும் குறைந்த மாநிலங்களில் வர்த்தகம் செய்தபோதிலும் இந்த அளவுக்கு விற்பனையில் பாலாஜி வேஃபர்ஸ் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் எஃப்.எம்.ஜி.சி. துறையை சேர்ந்த நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ், சாஸ்கள், பாஸ்தா மற்றும் தானியங்கள் பிரிவு ஆண்டுக்கு ரூ.5,300 கோடி அளவுக்கு விற்பனையாகிறது. ஜூபிலெண்ட் புட்வோர்க்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5,158 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பாலாஜி வேஃபர்ஸ் வருவாய் புள்ளிவிவரம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
2022-23ம் நிதியாண்டில் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.409 கோடி ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.7.2 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சந்துபாய் விரானி கூறுகையில், பொதுவாக விற்பனையில் 8-9 சதவீதம் லாபம் கிடைக்கும்.
ஆனால் தொற்றுநோய் காலமான முந்தைய 2 ஆண்டுகள் இதில் விதி விலக்கு. கொரோனா காலத்தில் முக்கிய மூலப்பொருட்கள் விலை உயர்ந்தது மற்றும் சரக்கு போக்குவரத்து செலவினம் இரு மடங்காக உயர்ந்தபோதிலும் நாங்கள் விலையை உயர்த்தவில்லை. இதனால் அந்த ஆண்டுகளில் லாபம் பெரிய அளவில் வரவில்லை.
தற்போது சமையல் எண்ணெய் மற்றும் மூலதன செலவினம் குறைந்துள்ளது, நிறுவனத்தின் லாப திறனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நிறுவனத்தில் இருந்து மூத்த பணியாளர்கள் பலர் போட்டி நிறுவனங்களுக்கு சென்றதால் பணியாளர் செலவினமும் குறைந்தது.
எங்கள் தயாரிப்புகள் போட்டி நிறுவனங்களை காட்டிலும் கணிசமான அளவு மலிவானவை என்பதால் நாங்கள் விலை நிர்ணயத்தில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். போட்டி நிறுவனங்களை காட்டிலும் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம் விளம்பரம் மற்றும் புரோமோஷனுக்காக மிக குறைந்த அளவிலேயே செலவிடுகிறது.
பெரும்பாலான எஃப்.எம்.ஜி.சி. நிறுவனங்கள் தங்கள் விற்பனையில் 8 முதல் 12 சதவீதத்தை விளம்பரங்களுக்காக ஒதுக்கும்போது, இந்த நிறுவனம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே ஒதுக்கிறது. பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தின் மலிவு விலை உக்தி தான் அந்நிறுவனத்தின் பெரிய பலம் என்று பார்லே புராடக்ஸ் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த தலைவரான கிருஷ்ணராவ் புத்தர் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications