சிங்க பாதையில் பிட்காயின்.. கிறிஸ்துமஸ் நாளில் புதிய உச்சம்.. 24,626 டாலர்..!

2020 துவக்கத்தில் கொரோனா பாதிப்பின் எதிரொலியாகப் பிட்காயின் வளர்ச்சி அடைந்தபோது பல முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தனர், ஆனால் இன்று பல நாடுகளின் அரசுகளும், பல முன்னணி வங்கிகளும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு ஏதுவான தளத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இதேவேளையில் பல வர்த்தகத் தடைகளைத் தாண்டி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் முக்கிய முதலீடாக மாறிய பிட்காயின் 2020ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 234 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது.

சப்ளை மற்றும் டிமாண்ட்

சப்ளை மற்றும் டிமாண்ட்

பிட்காயின் விலை உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணம் சப்ளை மற்றும் டிமாண்ட் மத்தியில் இருக்கும் பற்றாக்குறை தான். சந்தையில் வர்த்தகம் செய்யும் பிட்காயின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வேளையில் பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது.

21 மில்லியன் பிட்காயின்

21 மில்லியன் பிட்காயின்

இந்நிலையின் பிட்காயின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் அல்காரிதம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அல்காரிதம் படி 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உருவாக்க முடியும், இந்த அளவீட்டை 2140ஆம் ஆண்டில் அடையும் எனக் கணக்கிடப்பட்டு வருகிறது. இதனால் நீண்ட கால முதலீடு என்பது இதன் மூலம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதேவேளையில் பிட்காயின் தயாரிப்புக்குப் பிரத்தியேக உரிமம் கொடுக்கப்படும் நிலையில், இதன் காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

1 பில்லியன் டாலர் மதிப்பு

1 பில்லியன் டாலர் மதிப்பு

மார்ச் 2013ல் சந்தையில் இருக்கும் மொத்த பிட்காயின் மதிப்பு 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்த பின்பு இதுவரை 2 முறை மட்டுமே உச்ச விலை அடைந்துள்ளது. ஆனால் உச்ச விலையில் சரியும் போது சுமார் 80 சதவீதம் வரையிலான சரிவை அடைகிறது.

மேலும் இந்த இரு சரிவும் பிட்காயின் Halving நடவடிக்கையின் போது நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

7 வருட வளர்ச்சி

7 வருட வளர்ச்சி

2013ல் 1 பில்லியன் டாலர் அடைந்த மொத்த பிட்காயின் சந்தை மதிப்பு 7 வருட காலத்தில் இதன் அளவு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தற்போது 456.08 பில்லியன் டாலரை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறை நாளிலும் பிட்காயின் மதிப்பு 24,626.95 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு 5.70 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஒரு பிட்காயின் மதிப்பு 18.1 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+