உலக நாடுகளைப் போல் இந்திய மக்கள் சுற்றுலா செல்வதற்காக அதிகப்படியான செலவு செய்யமாட்டார்கள் என்ற பிம்பம் பல தலைமுறையாக இருந்தது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பழைய பிம்பத்தை உடைத்து வெளிநாட்டில் ஹாலிடே, சுற்றுலா, உள்நாட்டில் ஆடம்பர சுற்றுலா செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் ஒவ்வொரு மாநிலமும், தமிழ்நாடு உட்படச் சுற்றுலா துறையை மேம்படுத்தத் தனி பட்ஜெட், திட்டம், கொள்கையை உருவாக்கி வருகிறது. மறுமுனையில் உலகில் பல நாடுகள் இந்தியச் சுற்றுலா பயணிகளை ஈர்க்க விசா கட்டுப்பாட்டை நீக்கி வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் இன்ப சுற்றுலா செல்வதற்காகவே தனி சேமிப்பு, தனி பட்ஜெட் போடுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு இந்திய மக்கள் அதிகம் சென்றுள்ள இடங்கள் எது தெரியுமா. இந்த வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியச் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு 2019-ஐ காட்டிலும் சிறப்பான வருடமாக இருந்துள்ளது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் முழுவதும் விமான கட்டணம் உயர்வு குறித்து மக்கள் அதிகம் பேசியுள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் இந்திய மக்கள் தற்போது அதிகப்படியாக விமான பயணத்தை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர் என மேக்மைடிரிப் நிறுவனர் மற்றும் க்ரூப் சிஇஓ ராஜேஷ் மாகோவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய டிராவல் புக்கிங் தளமான மேக்மைடிரிப்-ன் தரவுகள் படி டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் மக்கள் அதிகம் விரும்பி சென்ற இடங்களாகக் கோவா, ராஜஸ்தான், வாரணாசி, கேரளா, ரிஷிகேஷ் மற்றும் காஷ்மீர் ஆகியவை உள்ளது.
இதுவே வெளிநாடுகள் எனில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகியவை தொடர்ந்து விருப்பமான நகரங்கள் பட்டியலில் இருக்கிறது. மலேசியா, இலங்கை, ஹாங்காங் மற்றும் கஜகஸ்தான், மாகோ ஆகிய நாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என மேக்மைடிரிப் தரவுகள் காட்டுகிறது.
இதோடு மலேசியா, தாய்லாந்து ஆகியவை தற்போது இந்தியர்களுக்கான விசா-வை ரத்து செய்துள்ள காரணத்தால் மாத அடிப்படையில் இந்நாட்டிற்குச் செல்ல விரும்புவோரின் தேடல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது என Ixigo நிறுவனத்தின் சிஇஓ அலோகே பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் உள்நாட்டு விமான பயணங்கள் குறித்த தேடல் கடந்த வருடத்தைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாக உள்ளது, இதேபோல் வெளிநாட்டு விமான பயணங்கள் குறித்த தேடல் 54 சதவீதம் அதிகமாகியுள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications