இந்தியாவில் 25.3 கோடி மக்கள் புகையிலை பயன்படுத்தி வருகிறார்கள், இது உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். இந்த நிலையில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலையை பாதிக்கும் வகையில் செய்யப்படும் சிறிய மாற்றமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியிருக்கையில் சிகரெட் மீது 40% ஜிஎஸ்டி வரி இருக்கும் போது புதிகாக கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரியால் ஒரு சிகரெட் எவ்வளவு உயரும் என தெரியாமல் புகைபிடிக்கும் மக்கள் குழம்பியுள்ளனர்.
சிகரெட் பிடிப்பவர்களுக்கு 2026 பிப்ரவரி 1 முதல் கலால் வரி விதிப்பு காரணமாக செலவு அதிகரிக்க உள்ளது. அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு புதிய கலால் வரி விதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2017 ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பிறகு சிகரெட் மீதான வரி விதிப்பில் செய்யப்படும் மிகப்பெரிய மாற்றம் இது.

தற்போது மத்திய அரசு, சதவீதம் அடிப்படையில் வரியை விதிக்காமல் கட்டணத்தின் மூலம் கலால் வரியை புகுத்தியுள்ளது. இதேபோல் சிகரெட்டின் நீளம் மற்றும் பில்டர் பொறுத்து வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் பிராண்டை விட சிகரெட்டின் அளவே விலையை தீர்மானிக்கும் என்பது முதல் குழப்பத்திற்கான விடை.
புதிய வரி அமைப்பு
பிப்ரவரி 1 முதல் 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கலால் வரி விதிக்கப்படும். இது ஜிஎஸ்டி விதிப்புக்கு மேல் விதிக்கப்படுகிறது.
மேலும் இந்த வரி அளவு சிகரெட்-ல் பில்டர் உள்ளதா, பில்டர் இல்லையா என்பதையும், சிகரெட் நீளத்தையும் பொறுத்து வரி மாறுப்படுகிறது. கிட்டத்தட்ட 4 பிரிவில் இந்த கலால் வரி நடைமுறைக்கு வருகிறது.
ஒரு சிகரெட்டுக்கு எவ்வளவு உயரும்
குறுகிய, பில்டர் இல்லாத சிகரெட் (65 மிமீ நீளம் வரை) வரி மூலம் ரூ.2.05 விலை உயரும்.
குறுகிய பில்டர் உள்ள குறுகிய சிகரெட் ரூ.2.10 வரை விலை உயரும்.
நடுத்தர நீளம் (65-70 மிமீ) ரூ.3.6 முதல் ரூ.4 வரை விலை உயரும்.
நீண்ட, பிரீமியம் சிகரெட் (70-75 மிமீ) ரூ.5.4 வரை விலை உயரும்.
4 பிராண்ட் சிகரெட்
இதனால் கோல்ட் ஃப்ளேக் பிரீமியம், ரெட் அண்ட் வைட் கிங் சைஸ், கிளாசிக், மார்ல்போரோ, நேவி கட், ஐஸ் பர்ஸ்ட் போன்ற நீண்ட சிகரெட்டுகள் அதிகப்படியான விலை உயர்வை எதிர்கொள்ளும்.
நிறுவனங்களின் முடிவு என்ன..?
இதேபோல் நிறுவனங்கள் இந்த வரி உயர்வை எப்படி இந்த விலை உயர்வை நடைமுறைப்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டியதாக உள்ளது. மொத்த வரி சுமையை மக்கள் தலையில் விதித்தால் சிகரெட் விலை உயர்ந்து விற்பனை குறையும். இப்படியிருக்கையில் இந்த வரி சுமை நிறுவனங்கள் முழுமையாகவோ அல்லாது பகுதியாகவோ தான் வாடிக்கையாளர்கள் மீது விதிக்கும்.
விற்பனை அளவை பாதுகாக்க ஐடிசி மற்றும் காட்ஃப்ரை பிலிப்ஸ் நிறுவனங்கள் பிராண்டுகளுக்கு ஏற்ப விலை உயர்வை படிப்படியாக செய்யலாம்.
மொத்த வரி சுமை
புதிதாக மாற்றப்பட்டு உள்ள ஜிஎஸ்டி விதிமுறையில் புகையிலை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 அல்லது 40 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதோடு கலால் வரி, ஹெல்த் அண்ட் நேஷனல் செக்யூரிட்டி செஸ் ஆகியவற்றின் மூலம் மொத்த வரி அளவு ரீடைல் விலையில் 53 சதவீதமாகும்.
உண்மையில் உலக சுகாதார அமைப்பு சிகரெட் மீது 75 சதவீத வரியை விதிக்க பரிந்துரை செய்துள்ளது. இதை ஒப்பிடும் போது இந்திய அரசு விதிக்கும் வரி குறைவு. இந்த மாற்றம் புகைப்பழக்கத்தை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த கலால் வரி விதிப்பு அறிவிப்பு ஜனவரி 1 ஆம் தேதி அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications