இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) தலைவராகவும், ஐ.டி.சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் சஞ்சீவ் புரி நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்க எடுக்க இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் வேளையில் மீட்டு எடுக்க நாணய கொள்கையில் கட்டாயம் தளர்வு அவசியம் என்பதை சிஐஐ அமைப்பையும், சஞ்சீவ் புரி-யும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாட்டில் பல மாதங்களாகத் தொடர்ந்து நிலவும் அதிகப்படியான உணவு பணவீக்கம் குறித்து சஞ்சீவ் புரி கவலை தெரிவித்தார், உணவு விலைகளை தற்போதைய பணவீக்க இலக்கு கட்டமைப்பிலிருந்து பிரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம் போன்ற காரணிகளால் உணவு பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் சஞ்சீவ் புரி கூறினார்.

ஆர்பிஐ தனது அடுத்த நாணய கொள்கையைப் பிப்ரவரி 5-7 ஆம் தேதி திட்டமிட்டு உள்ளது, இக்கூட்டம் புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டம் தான் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் கட்டாயம் மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்.
பிப்ரவரி 1 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், CII பல்வேறு முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாகக் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்குப் பணவீக்க பாதிப்புகளைத் தணிக்க எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைப்பது முக்கிய பரிந்துரையாக வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வருடத்திற்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு விதிக்கப்படும் வருமான வரி விகிதத்தைக் குறைக்க CII வலியுறுத்தியுள்ளது.
இவ்விரு நடவடிக்கை செயல்படுத்தினால் பொருட்கள் விலை குறைந்து நுகர்வோர் செலவினங்கள் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதேவேளையில் அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும்.
மறுமுனையில் இந்த மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்பு உருவாக்குவதை முன்னுரிமைப்படுத்தும் என்றும் சஞ்சீவ் புரி நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக உழைப்புத் திறன் அதிகம் தேவைப்படும் துறைகளில் குறிப்பிட்ட விதிமுறை மாற்றம் செய்வது மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications