இந்தியாவில் பல துறை சார்ந்த அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக சிஐஐ மற்றும் நைட் ஃபிரான்க் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, குறிப்பாக உலக தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வருவதால் கோ- வொர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பலதுறை சார்ந்த ஊழியர்கள் இணைந்து பணியாற்றும் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கோ - வொர்க்கிங் ஸ்பேஸ்களின் எண்ணிக்கை 1,700ஆக உள்ளது. இது 2030ஆம் ஆண்டு இது 2,400ஆக அதிகரிக்கும் என்றும், 2034ஆம் ஆண்டில் 2,880 ஆக உயரும் என்றும் சிஐஐ மற்றும் நைட் ஃபிரான்க் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் இந்தியாவில் அலுவலகங்களுக்கான இடத் தேவை 1.7 பில்லியன் சதுர அடிகளாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் தொழில்களை விரிவாக்கம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப அலுவலகங்கள் இந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த மற்றும் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவில் தொழில்களை தொடங்குவதற்கான சூழல் சாதகமாக இருப்பது, ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகியவை காரணமாக கமர்சியல் ரியல் எஸ்டேட் வளர்ந்து வருகிறது.
அரசு சார்பில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பது, மென்பொருள் தொழில் பூங்காக்கள், தொழிற்பேட்டைகள் அமைப்பது ஆகியவை இந்தியாவின் கமர்சியல் ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சிக்கு உதவின.
கொரோனாவிற்கு பின் வீட்டில் இருந்தே பணிபுரியும் வேலைகள் அதிகரித்திருப்பதால், உலகளவில் அலுவலக தேவைக்கான இடம் குறைந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் அதற்கு மாறாக அலுவலகங்களின் தேவை அதிகரித்துவிட்டது என சிஐஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை வளர்ச்சிக்கு ஏற்ப ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி காணும், நிறைய வாய்ப்புகள் உண்டாகும் என சிஐஐ தலைவர் நீல் ரஹேஜா தெரிவித்துள்ளார்.
Tier 1 நகரங்கள் மட்டுமின்றி Tier 2 & 3 நகரங்களிலும் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என ரியஸ் எஸ்டேட் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்த கட்டணம், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஐடி மற்றும் சேவை துறை வளர்ச்சி, திறமையான பணியாளர்கள் கிடைப்பது ஆகியவற்றால் Tier 2 & 3 நகரங்களிலும் வளர்ச்சியை காண முடிகிறது என தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அலுவலகங்களுக்கான ரியல் எஸ்டேட் துறையில் இருந்து கிடைக்கும் வருவாய் 2034ஆம் ஆண்டில் 125 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என தெரிகிறது.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications