முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 41% லாபம் அதிகரிப்பு.. உற்சாகத்தில் சிப்லா..!

மருந்து துறையில் முன்னணி நிறுவனமான சிப்லா கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 41.18 சதவீதம் அதிகரித்து 665.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது சந்தையில் வலுவான விற்பனையை கண்டுள்ள நிலையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு 471.35 கோடி ரூபாய் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 14.62 சதவீதம் அதிகரித்து 5,038.29 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4,395.78 கோடி ரூபாயாக இருந்தது.

வலுவான வளர்ச்சியில் சேவைத் துறை

வலுவான வளர்ச்சியில் சேவைத் துறை

இந்திய வர்த்தகம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகரித்தும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 33 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. கொரோனா காரணமாக நடப்பு ஆண்டில் சேவைத் துறை வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ள நிலையில், மருந்து நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளன.

இதன் வரி, தேய்மானம், வட்டிக்கு முந்தைய லாபம் 29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,177 கோடி ரூபாயாக கண்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டில் 909 கோடி ரூபாயாக கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

வலுவான தேவை

வலுவான தேவை

இந்த செப்டம்பர் காலாண்டு முடிவுகள் குறித்து, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் குளோபல் தலைமை செயல் அதிகாரி உமங் வோஹ்ரா கூறியுள்ளார். இது சந்தையில் வலுவான தேவையினை பிரதிபலிக்கிறது. அது மட்டும் அல்ல, நிறுவனம் செலவும் மேம்படுத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்தியது. இது EBITDA மார்ஜின் விளிம்பை 23 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்கியது. குறிப்பாக இந்திய சந்தை எங்களுக்கு நல்ல செயல்திறனை காண உதவியது என்றும் கூறியுள்ளார்.

முதலீட்டினை தொடர்ந்து செய்வோம்

முதலீட்டினை தொடர்ந்து செய்வோம்

தென் ஆப்பிரிக்கா அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் வலுவான வளர்ச்சியின் வேகத்தினை தக்க வைத்துக் கொண்டன. அதோடு நாங்கள் உலகளாவிய விற்பனையை விரிவுபடுத்த நாங்கள் எங்களது முதலீட்டினை தொடர்ந்து செய்வோம்.

தென்னாப்பிரிக்கா வணிகம்

தென்னாப்பிரிக்கா வணிகம்

தென் ஆப்பிரிக்காவில் தனியார் மற்றும் டெண்டர் வணிகங்களில் உள்ள தொடர்ச்சியான வேகமானது, தென் ஆப்பிரிக்கா வணிகத்தினை உந்துகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உள்ளூர் நாணயத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்து, ஓடிசி மற்றும் டெண்டர் வணிகத்தால் இயக்கப்படுகிறது.

அமெரிக்கா & ஐரோப்பிய சந்தை

அமெரிக்கா & ஐரோப்பிய சந்தை

இதே புதிய வெளியீடுகளில் தொடர்ச்சியான இழுவை காரணமாக அமெரிக்க வணிகம் 141 மில்லியனை அறிவித்தது. இதே ஐரோப்பிய செயல்பாடுகளில் கடந்த ஆண்டினை விட 24 சதவீதம் வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளன. இது வலுவான தேவையினை காரணமாக இந்த வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+