இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும், கொரோனா தடுப்பு மருந்து குறைவாகத் தயாரிக்கப்படுவதாலும் தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவில் குணப்படுத்தவும் பல்வேறு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
சமீபத்தில் டாக்டர் ரெட்டி நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யவும் இந்தியாவில் உற்பத்தி செய்யவும் ஒப்புதல் பெற்ற நிலையில், தற்போது டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்குப் போட்டியாகச் சிப்லா சுவிஸ் நாட்டின் Roche நிறுவனத்தின் மருந்து ஒன்றை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா தொற்று
மைல்டு டூ மாடரேட் (Mild to Moderate) கொரோனா தொற்று உள்ளவர்கள் இதர பிற நோய்களால் ஆபத்தான கட்டத்தில் இருந்தால் அவர்களுக்குப் பயன்படுத்தும் Roche ஆன்டிபாடி காக்டைல் (Casirivimab மற்றும் Imdevimab) மருத்தை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய Roche இந்தியா மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.
1 லட்சம் பேருக்கு மருந்து
இவ்விரு நிறுவனங்களின் ஒப்பந்தம் படி சுமார் 1 லட்சம் பேருக்கு பயன்படுத்தும் மருத்தை அதாவது 2 லட்சம் வயல்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும், இது ஜூன் 15க்கு மேல் மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
சிப்லா உடன் கூட்டணி
சிப்லா நிறுவனத்திற்கு இந்தியாவிற்கு ஏற்கனவே பெரிய அளவிலான நெட்வொர்க் இருக்கும் காரணத்தால் Roche இந்தியா இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளது. எல்லாம் சரி இந்த மருத்தின் விலை எனத் தெரியுமா..?
ரோச் ஆன்டிபாடி காக்டைல் மருந்து
ரோச் ஆன்டிபாடி காக்டைல் மருந்து ஒரு டோஸ் 59,750 ரூபாய்க்கு (வரி உடன் சேர்த்து) விற்பனை செய்ய உள்ளது சிப்லா. சாமானியர்கள் ஏற்கனவே லாக்டவுன் காரணமாக வேலைவாய்ப்பு, வருமானம் இல்லாமல் நிதிநிலையில் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் உயிர் காக்கும் மருத்தை 59,750 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது சிப்லா.
1,19,500 ரூபாய் விலை
ரோச் ஆன்டிபாடி காக்டைல் ஒரு டோஸ்-ல் 1200mg (Casirivimab 600mg மற்றும் Imdevimab 600mg) இதன் மூலம் ஒருவரின் உயிர் காக்கச் செலுத்த வேண்டி 2 டோஸ் மருத்தின் விலை 1,19,500 ரூபாய். இந்த மருந்தை பயன்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதான் இந்தியா.. இதுதான் மக்களின் நிலை
கொரோனா வேக்சின் தயாரிக்கும் நிறுவனங்கள் மாநில அரசுடன் பேச விருப்பமில்லை
மத்திய அரசு, மாநில அரசுக்கு விற்பனை செய்யும் வேக்சின் விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை.
இதனால் மக்களுக்கு வேக்சின் கிடைப்பது முழுமையாகத் தடைப்பெற்று உள்ளது
மக்கள் இறக்கிறார்கள்..
சாமானிய மக்கள் என்ன தான் செய்ய முடியும்..
இறப்பதைத் தவிர..!!
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications