உலகின் முன்னணி டெக் மற்றும் நெட்வொர்கிங் ஹார்டுவேர் நிறுவனமான சிஸ்கோ, இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையைத் இன்று சென்னையில் திறந்துள்ளது. இந்தியாவில் தனது உற்பத்தித் திறன்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல ஆண்டுகள் தொடர்ந்து முதலீட்டு செய்யும் திட்டத்தையா சிஸ்கோ துவங்கியுள்ளது.
சிஸ்கோ நேரடியாக தனக்கான தொழிற்சாலையைத் துவங்காமல் ஆப்பிள் நிறுவனத்தைப் போல் ஒப்பந்த உற்பத்தியாளரான ஃப்ளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீபெரும்புதூரில் நவீன உற்பத்தி தளத்தை துவங்கியுள்ளது. சென்னை தொழிற்சாலையில் இருந்த சிஸ்கோ உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கான ரவுட்டிங் மற்றும் ஸ்விட்சி ப்ராடெக்களை தயாரித்து வர்த்தக சந்தைக்குக் கொண்டு வர உள்ளது.

சென்னை தொழிற்சாலை குறித்து சிஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த உற்பத்தி தளத்தில் வருடம் 1.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் வகையிலான பொருட்களை உருவாக்க முடியும் மற்றும் இதன் மூலம் சுமார் 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.
சிஸ்கோ - ஃப்ளெக்ஸ் இணைத்து உருவாகியுள்ள சென்னை உற்பத்தி தளத்தில் முதல் கட்டமாக சிஸ்கோவின் மிகவும் முக்கிய வர்த்தக பொருளான நெட்வொர்க் கன்வர்ஜென்ஸ் சிஸ்டம் (NCS) 540 சீரியஸ் ரவுட்டர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரின்டெட் சர்கியூட் போர்டு அசம்பிளி உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக சிஸ்கோ இந்த தொழிற்சாலையில் பல வருட முதலீட்டு திட்டத்தை வகுத்துள்ளது. இதன் மூலம் சிஸ்கோவின் சர்வதேச வர்த்தகத்திற்குச் சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆலை மிகவும் முக்கியமானதாக மாற உள்ளது.
இன்று நடந்த சிஸ்கோ தொழிற்சாலையின் திறப்பு விழாவில், சிஸ்கோவின் முக்கிய நிர்வாகிகள், மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் TRB ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் TRB ராஜா அவர்கள் பேசுகையில் "தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய இலக்கு என்னவென்றால், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியைக் கொண்டு செல்வதுதான், இதற்காகத் தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய விரும்புகிறோம்" என்று ராஜா கூறினார்.
சிஸ்கோ நிறுவனத்தையும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சக் ராபின்ஸ்-ஐ தமிழ்நாட்டில் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை அதிகரிக்கவும், சென்னையைத் தாண்டி கோவை, மதுரை மற்றும் தஞ்சாவூர் போன்ற நகரங்களில் தங்கள் தொழிற்சாலை, அலுவலகங்களைக் கொண்டு வரக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் TRB ராஜா கூறினார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications