அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, இந்த ஆண்டின் துவக்கத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மிகப் பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கத்திற்கு வர்த்தக மற்றும் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டியது. பொதுவாக இதுபோன்ற பெரிய டெக் நிறுவனங்கள் அதிகப்படியான நிதி ஆதாரத்துடன் இருக்கும் காரணத்தால் சிறு தடுமாற்றத்தின் போது பணிநீக்கம் செய்யாது.
ஆனால் 2024ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் கண்களை மூடிக்கொண்டு டெக் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2 முறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது சிஸ்கோ. 2வது முறை பணிநீக்க சுற்றில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக TechCrunch வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கிறது.

உலகளவில் சிஸ்கோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவை குறைந்து வரும் காரணத்தாலும் மற்றும் செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இருப்பாதலும், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக முதலீடு செய்து வருவதாலும் 3வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சிஸ்கோ நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை கடந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 85,000 ஆக இருந்தது.
ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பணிநீக்கத்தில் சிஸ்கோ நிறுவனம் சுமார் 7% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது இதன் மூலம் சுமார் 5,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதன் மூலம் மொத்தம் 10000 ஊழியர்களை சிஸ்கோ பணிநீக்கம் செய்துள்ளது.
சிஸ்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி சக் ரோபின்ஸ் இந்த பணிநீக்கம் குறித்துக் கூறுகையில் "எங்கள் நெட்வொர்க்கிங் உபகரணங்களுக்கான தேவை மீண்டும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார். சிஸ்கோ நிர்வாகத்தின் வியூகத்தின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள துவக்க நிறுவனங்களுக்கு $1 பில்லியன் ஒதுக்கீடு செய்யவும், சைபர் பாதுகாப்பு நிறுவனமான Splunk-ஐ 28 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தவும் உள்ளது.
ஆகஸ்ட் மாதம், அமெரிக்க தொழில்நுட்பத் துறை பணிநீக்கத்தின் அலையில் சுமார் 27,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பாதிக்கப்பட்டனர். இன்டெல், IBM, சிஸ்கோ போன்ற தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியங்களும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், குறிப்பிடத்தக்க அளவிலான பணிநீக்கங்களை அறிவித்தன. இதனால் இந்த ஆண்டு தொழில்நுட்பத் துறையில் சுமார் 422 நிறுவனங்கள் 136,000 க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications