CISCO: இந்தியாவில் புதிய உற்பத்தி தளம்.. உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சப்ளை..!

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்க பல முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தும் , முயற்சியை கைவிட்ட நிலையில் மீண்டும் இதற்கான முயற்சி துவங்கியுள்ளது.

சிஸ்கோ நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைத்து தனது முக்கியமான கருவிகளை உள்நாட்டிலேயே தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.

CISCO: இந்தியாவில் புதிய உற்பத்தி தளம்.. உலக  நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சப்ளை..!

இந்த முக்கியமான திட்டத்திற்கு சிஸ்கோ 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது. சிஸ்கோ தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சக் ராபின்ஸ் தனது இந்திய வந்துள்ளதை அடுத்து முதலீட்டு குறித்து அறிவித்தார்.

Cisco இப்போது இந்தியாவில் டெஸ்டிங், டெலவலப்மென்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உட்பட முக்கிய உற்பத்தி திறன்களை உருவாக்கி வருகிறது, இதோடு in-house repair ஆப்ரேஷன்களையும் விரிவாக்கம் செய்ய உள்ளது. மேலும் இந்திய சந்தையில் சிஸ்கோ எதிர்கொள்ளும் விநியோகச் சங்கிலியின் பின்னடைவை ஆதரிப்பது, சேவைகளின் கால தாமதத்தை குறைப்பது மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்துவது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உள்ளது.

மேலும் சிஸ்கோ தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சக் ராபின்ஸ் கூறுகையில், நாங்கள் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கப் போகிறோம். மேலும் உலகம் முழுவதிலும் உள்ள எங்களின் 17 நாடுகளின் உற்பத்தித் தளத்தில் இருப்பது போலவே இந்தியாவிலும் முழு உற்பத்தி உலகளாவிய முனைத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்தார்.

CISCO: இந்தியாவில் புதிய உற்பத்தி தளம்.. உலக  நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சப்ளை..!

இந்த உற்பத்தி திட்டம் மூலம் உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி இரண்டையும் ஒப்பிடும் போது, ​​இந்திய தொழிற்சாலையில் முதல் ஆண்டில் 1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் தயாரிக்கப்படும் என எதிர்பார்ர்க்கப்படுகிறது. இந்திய உற்பத்தி தளத்தை வைத்து ஐரோப்பா வரையிலான வர்த்தகத்திற்கு ஏற்றுமதி செய்யும் உலகளாவிய உற்பத்தி முனையாகமாக இந்தியா இருக்கும் எனவும் Chuck Robbins தெரிவித்துள்ளார்.

சிஸ்கோ இந்தியாவில் அதன் முக்கியமான இரண்டு தயாரிப்பு பிரிவுகளை அறிமுகப்படுத்த உள்ளது, ஒன்று ஸ்விட்சிங் பிளாட்ஃபார்ம்கள் இது இந்தியாவில் உள்ள பல டேட்டா சென்டர் நெட்வொர்க்குகளின் மையமாக உள்ளது. இரண்டாவது சில 5G சேவை தளத்தில் இயங்கும் அதிநவீன ரூட்டிங் தள பிரிவையும் அறிமுகம் செய்ய உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+