Cisco: அமெரிக்காவில் மட்டும் 700 பேர் பணிநீக்கம்..!

உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் சேவை நிறுவனமான சிஸ்கோ அமெரிக்காவின் பே ஏரியா பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதில் முக்கியமாக அதன் சான் பிரான்சிஸ்கோ அலுவலகங்களில் சுமார் 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

சிஸ்கோ நிறுவவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அறிவித்த நிலையில், தற்போது எத்தனை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

சிஸ்கோ

சிஸ்கோ

SFGATE என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி சிஸ்கோ தனது வர்த்தக மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரையில் மொத்தம் 673 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.இதன் மூலம் சிஸ்கோ நிறுவனமும் டெக் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்த அமேசான், சேல்ஸ்போர்ஸ், மெட்டா, ட்விட்டர், உபர் மற்றும் பிற டாப் டெக் நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.

 இரண்டு  துணைத் தலைவர்கள்

இரண்டு துணைத் தலைவர்கள்

சிஸ்கோ நிறுவனம் தனது தலைமையகத்தில் மட்டும் இரண்டு துணைத் தலைவர்கள் உட்பட 371 டெக் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர் என SFGATE நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 Milpitas அலுவலகம்

Milpitas அலுவலகம்

சிஸ்கோ நிறுவனத்தின் Milpitas அலுவலகத்தில் 222 டெக் ஊழியர்கள், ப்ரைமரி இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை இந்த பணிநீக்க நடவடிக்கையில் நிறுவன பணியில் இருந்து நீக்கியுள்ளது.

அடுத்த பணிநீக்க சுற்று

அடுத்த பணிநீக்க சுற்று

இந்த நிலையில் அமேசான் போல் சிஸ்கோ நிறுவனமும் அடுத்த பணிநீக்க சுற்றுகளை கையில் எடுக்குமா என்பது தெளிவாக அதுவரையில் அறிவிக்கவில்லை. இதனால் சிஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

நெட்வொர்க்கிங் துறை

நெட்வொர்க்கிங் துறை

நெட்வொர்க்கிங் துறையில் ராஜாவாக இருக்கும் சிஸ்கோ அதன் மொத்த பணியாளர்களில் 5 சதவீதத்தை அல்லது 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக நவம்பர் மாதம் அறிவித்தது.இந்த நிலையில் அமெரிக்காவின் பே ஏரியாவில் மட்டுமே சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

 52 சதவீத ஊழியர்கள்

52 சதவீத ஊழியர்கள்

சிஸ்கோ தனது உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கையில் 52 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளனர். இந்த நிலையில் எத்தனை ஊழியர்கள் இதுவரையில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது பற்றி சிஸ்கோ தெரிவிக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+