உலகின் முன்னணி நெட்வொர்கிங் நிறுவனமான சிஸ்கோ தனது வர்த்தகத்தை மறுசீரமைக்கும் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
சிஸ்கோ சென்னையில் தனது கருவிகளை உற்பத்தி செய்வதற்காக முக்கியக் கூட்டணிக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நிலையில், மோசமான பணிநீக்க அறிவிப்பு அதன் ஊழியர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சிஸ்கோ இந்த வர்த்தக மறுசீரமைப்பு மற்றும் பணிநீக்கம் மூலம் முக்கிய வளர்ச்சி பகுதிகளில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. இதேபோல் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என நம்புகிறது.
கலிபோர்னியா-வின் சான் ஜோஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் 2023 நிதியாண்டின்படி அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 84900 ஆக உள்ளது. இந்தப் பணிநீக்க சுற்றில் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.
2024 ஆம் ஆண்டில் கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்னாப்சாட் உட்பட உலகின் பல முன்னணி டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை அறிவித்த நிலையில், இந்தப் பட்டியலில் சிஸ்கோ-வும் இணைந்துள்ளது.
பிப்ரவரி 14 அன்று சிஸ்கோ நிறுவனம் தனது நிதியியல் முடிவுகளை வெளியிடத் தயாராகி வரும் வேளையில், இந்தப் பணிநீக்க அறிவிப்பு பெரும் அச்சத்தை அதன் முதலீட்டாளர்களும், ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டுச் சிஸ்கோ பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியான நிலையில் இதற்கு மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் எரிக்சன் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டுச் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கிய வேளையில் சிஸ்கோ-வும் இதில் இணைந்துள்ளது.
இந்த வாரம் சமூகவலைத்தளத் துறையில் 2K கிடஸ்-ன் பிடித்தமான தளமாக இருக்கும் ஸ்னாப்சாட் சேவையின் தாய் நிறுவனமான SNAP INC சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
இதேபோல் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆன்சைட்டில் இகுக்கும் மிட்-லெவல் ஊழியர்களில் பலருக்கு பணிநீக்க அறிவிப்புகள் குறித்த ஈமெயில் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
விப்ரோ 2021 ஆம் ஆண்டுக் கன்சல்டிங் நிறுவனமான CAPCO-வை சுமார் 1.45 பில்லியன் டாலருக்கு வாங்கியது. CAPCO வர்த்தகத்தில் அதிகளவிலான சம்பளம் பெறும் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர், இப்பிரிவில் இருந்து வருமானம், வளர்ச்சி ஆகியவை வந்தாலும் போதுமானதாக இல்லை என்பதால் மிட்-லெவல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications