உலகின் முன்னணி டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ, தனது வர்த்தகத்தையும், நிதி நிலையையும் மறுசீரமைப்பு செய்யும் வகையில் தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போது வெளியான தகவல்கள் படி சிஸ்கோ தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 83000 ஊழியர்களை வைத்துள்ள நிலையில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் சுமார் 4100 பேர் தங்களது பணியை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
சிஸ்கோ
இந்தியாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அதிகம் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சிஸ்கோ முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிஸ்கோவின் பணிநீக்கம் டெக் ஊழியர்கள் மத்தியில் அடுத்த அதிர்ச்சி செய்தியாகவே உள்ளது.
13.6 பில்லியன் டாலர் வருவாய்
சிஸ்கோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 13.6 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாகவும், உலகளவில் ஏற்பட்டு உள்ள வர்த்தகச் சரிவைக் காரணம் காட்டி தற்போது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
38000 ஊழியர்கள் பணிநீக்கம்
நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்டா, அமேசான், டிவிட்டர் ஆகிய 3 நிறுவனங்கள் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 38000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக layoffs.fyi என்னும் டேட்டா அக்ரிகேட்டர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகிறது.
2022 ஆம் ஆண்டுப் பணிநீக்கம்
2022 ஆண்டுத் துவக்கம் முதல் டெக் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இந்த நிலையில் 2022ல் டெக் துறையில் அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனங்கள் எது தெரியுமா.
டாப் 10
Shopify - 1000 ஊழியர்கள், காயின்பேஸ் - 58 ஊழியர்கள், அமேசான் - 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளது, மைக்ரோசாப்ட் - 1000 ஊழியர்கள், Stripe - 1100 ஊழியர்கள், Lyft - 600 ஊழியர்கள், ஸ்னாப்சாட் - 6000 ஊழியர்கள், டிவிட்டர் - 3000 ஊழியர்கள், மெட்டா - 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
இன்று சோமேட்டோ
இன்று தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனத்தில் டெக்னாலஜி, ப்ராடெக்ட், மார்கெட்டிங் என அனைத்து முக்கியக் கார்பரேட் நிர்வாகப் பிரிவில் இருந்தும் 3 சதவீத ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் எட்டெக் நிறுவனங்கள் 2022ல் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3 உயர் அதிகாரிகள்
கடந்த 2 வாரத்தில் மட்டும் சோமேட்டோ இணை நிறுவனர் மோஹித் குப்தா உட்பட 3 உயர் அதிகாரிகள் தங்களது பணியை ராஜினாமா செய்தனர், 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முன் இந்த 3 உயர் அதிகாரிகளையும் ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications