அமெரிக்கா: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு சிட்டி குரூப் வங்கி செயல்பட்டு வருகிறது. உலகின் முன்னணி வங்கி நிறுவனமாக இது திகழ்கிறது. இருந்தாலும் இந்த வங்கியில் அடிக்கடி ஊழியர்கள் தவறால் பல்வேறு பண பரிமாற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சிட்டி குரூப் வங்கி ஊழியர்கள் செய்த மிகப்பெரிய தவறு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிட்டி குரூப்பை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு 280 டாலர்களுக்கு (24,000 ரூபாய்) பதிலாக 81 டிரில்லியன் டாலர்களை வரவு வைத்துள்ளனர். பைனான்சியல் டைம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் சிட்டி குரூப் குழுமம் தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தவறுதலாக 81 டிரில்லியன் டாலர்களை (7000 லட்சம் கோடி ரூபாய்) அனுப்பியதாக தெரிவித்துள்ளது.

90 நிமிடங்களில் இந்த தவறை கண்டறிந்து அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது ஒரு ஊழியரின் டைப்பிங் எரர் தான் இதற்கு வித்திட்டதாம். இரண்டாவது ஊழியரும் இந்த தவறை கண்டறியாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் வாடிக்கையாளர் கணக்கிற்கு சென்றுவிட்டதாம்.
இந்த பரிவர்த்தனை முடிந்த 90 நிமிடங்களுக்குப் பிறகு மூன்றாவது ஊழியர் ஒருவர் தான் இதனை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெட்ஜர் கணக்கினை பார்வையிடும் போது இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டதாக சிட்டி குரூப் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் பைனான்சியல் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தவறுதலான பண பரிவர்த்தனை காரணமாக வங்கி சேவைகளிலோ அல்லது வாடிக்கையாளர்கள் மத்தியிலோ எந்த ஒரு எதிர்மறையான தாக்கமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் சிட்டி குரூப் வங்கியில் இது போல 10 முறை தவறுதலாக வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு திரும்ப பெறப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டு இதுபோல 13 முறை தவறுதலாக பணம் அனுப்பி இருந்தார்கள். சிட்டி குரூப்பில் இந்த தவறு மட்டும் ஆண்டுதோறும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் ஊழியர்கள் ரீதியாகவும் இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனை சரி செய்ய முடியாமல் சிட்டி குரூப் தொடர்ந்து பெயரை கெடுத்து கொண்டு வருகிறது. இதுபோல தவறுதலாக பணம் அனுப்பப்படும் பிரச்சினை தீர்க்காமல் இருந்ததற்காக 2020 ஆம் ஆண்டு சிட்டி குரூப் 150 மில்லியன் டாலர்களை அபராதமாகவும் செலுத்தியது.
சிட்டி குரூப் என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு வங்கி சேவை நிறுவனமாகும். 2024ஆம் ஆண்டில் 81 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. அமெரிக்க வங்கிகள் இது போல தவறான பண பரிவர்த்தனைகள் நடைபெறுவது வாடிக்கை தான் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications