இந்தியாவில் ரீடைல் வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்த சிட்டி குரூப், தற்போது தனது சர்வதேச வர்த்தகத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
Citigroup Inc. நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இந்த பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட போவது முதலீட்டு வங்கிப் பிரிவாக உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் பணிநீக்கம் அறிவிப்புகள் வெளி வந்தாலும், டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது முதலீட்டு நிறுவனங்கள், நிதியியல் சேவை நிறுவனங்கள், கன்சல்டன்சி நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட துவங்கியுள்ளது.
ரெசிஷன் அச்சம்
உலகம் முழுவதும் ரெசிஷன் அச்சம் அதிகரித்திருக்கும் நிலையில் அனைத்து துறைகளின் வர்த்தகம், வருமானம் பாதிக்க துவங்கியுள்ளது. இதற்கிடையில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் மத்திய வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்த தயாராக உள்ளது அதிலும் குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கி.
சிட்டிகுரூப்
இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை காப்பாற்றும் இதேவேளையில் நிதிநிலைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பு நிறுவனங்களும் எளிய வழியான பணிநீக்கத்தை கையில் எடுத்து உள்ளது. இதில் ஏற்கனவே தடுமாறி வரும் சிட்டிகுரூப்-ம் மாட்டிக்கொண்டு உள்ளது.
1 சதவீத ஊழியர்கள்
சிட்டி குரூப் நிறுவனத்தின் இந்தியா உட்பட தனது உலகளாவிய வர்த்தகத்தில் 240,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் 1 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களை மட்டுமே தற்போது பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறைந்தது 2000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருடாந்திர ஆய்வு
சிட்டி குரூப் ஒவ்வொரு வருடமும் தனது வர்த்தக கட்டமைப்புகளையும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளையும் ஆய்வு செய்யும், இதன் அடிப்படையில் தற்போதைய வர்த்தக சந்தைக்கு தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்து இந்த பணிநீக்கத்தை திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பணிநீக்கம் குறித்து சிட்டிபேங்க இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை.
ரீடைல் வர்த்தகம்
சமீபத்தில் சிட்டி குரூப் நிறுவனத்தை போலவே இதன் சக போட்டி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ், கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. சிட்டிகுரூப் ஏப்ரல் 2021 இல், இந்தியா உட்பட 13 நாடுகளில் உள்ள அதன் சில்லறை வங்கிச் செயல்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது, இந்த மாபெரும் மறுசீரமைப்பு பணிகள் மூலம் பெரும் தொகையை சேமித்த சிட்டி குரூப் தற்போது 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகியிருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
2000 ஊழியர்கள் பணிநீக்கம்
சிட்டிகுரூப் கடந்த சில ஆண்டுகளாக தனது வர்த்தக முறையை வேகமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மேனுவலாக செய்யும் அனைத்து பணிகளையும் ஆட்டோமேட் செய்ய பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இது பெரிய அளவிலான நன்மை அளிக்கும் என கூறப்பட்ட நிலையிலும் 2000 ஊழியர்கள் பணிநீக்க தகவல் வெளியாகியுள்ளது.
பணிநீக்கம்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது தொடர்ந்து புதிய ஊழியர்களை பணியில் சேர்த்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக அதிக வருவாய், பலன் அளிக்காத பிரிவில் இருக்கும் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு தேவையான இடத்தில் புதிய ஊழியர்களை சேர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications