சிட்டிகுரூப் ஏப்ரல் 2021 இல், இந்தியா உட்பட 13 நாடுகளில் உள்ள அதன் சில்லறை வங்கிச் செயல்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதன் மூலம் முதலீட்டு மற்றும் பிற முக்கிய நிதி சேவைகளில் மட்டும் இயங்க உள்ளதாக அறிவித்தது.
இந்த மாபெரும் மறுசீரமைப்பு பணிகள் மூலம் பெரும் தொகையை சேமித்த சிட்டி குரூப் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதையடுத்து சுமார் 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

சிட்டிகுரூப் ரீடைல் வங்கி சேவையை அளிப்பதை பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில் தற்போது தனது முக்கிய வர்த்தக பிரிவை மூன்று பிரிவுகளாக உடைக்கவும், அதை தனிப்பட்ட தலைமையில் நிர்வாகம் செய்யும் கட்டமைப்பை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
சிட்டிகுரூப்-க்கு தற்போது முக்கிய வர்த்தக பிரிவாக இருப்பது Institutional Clients Group தான் இதை 3 பிரிவுகளாக உடைக்க சிட்டிகுரூப் சிஇஓ ஜேன் ப்ராசர் திட்டமிட்டு உள்ளார். இதன் படி முதலீடு, கார்பரேட் பேங்கிங், குளோபல் மார்கெட் மற்றும் பணபரிமாற்ற சேவை என 3 பிரிவாக உடைக்க உள்ளது.
இந்த 3 பிரிவையும் தற்போது இருக்கும் 3 தலைவர்களும் தனித்தனியாக நிர்வாகம் செய்ய உள்ளனர், மூவரும் சிட்டிகுரூப் சிஇஓ ஜேன் ப்ராசர் கீழ் நேரடி கண்காணிப்பில் பணியாற்ற உள்ளனர். 2024 ஆம் நிதியாண்டின் ஆரம்பத்தில் Institutional Clients Group-ன் தலைவரான Paco Ybarra பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அறிவிப்பை சிட்டிகுரூப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் பைனான்சியல் டைம்ஸ் இத்தகவலை வெளியிட்டு உள்ளது. முதலீடு, கார்பரேட் பேங்கிங், குளோபல் மார்கெட் மற்றும் பணபரிமாற்ற சேவை ஆகியவற்றை தனியாக பிரிக்கப்படும் வேளையில் வர்த்தகம், வாடிக்கையாளர் கைப்பற்றல் அதிகரிக்க கூடும்.


Click it and Unblock the Notifications