அமெரிக்காவின் முன்னணி மற்றும் பழமையான வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் இந்தியா உட்பட 13 நாடுகளில் செய்யும் ரீடைல் மற்றும் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா..
சிட்டி குரூப்-கிற்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் டிரேடிங் வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானம் கிடைக்கும் காரணத்தால் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 சந்தைகளில் இருந்து ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகுகிறது.

மேலும் இந்த நாடுகளில் ரீடைல் மற்றும் நுகர்வோர் வங்கி சேவையில் பிற வங்கிகளுடன் போட்டிப்போட முடியாத காரணத்தால் தான் வெளியேற முடிவு செய்துள்ளது.
13 நாடுகளில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள சிட்டிகுரூப் ரீடைல் வர்த்தகப் பிரிவில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள காரணத்தால், இந்த விற்பனை மூலம் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான நிதியைத் திரட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிட்டிகுரூப்-ன் கிரெடிட் கார்ட் வர்த்தகத்தை எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் ஆர்பிஎல், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி போன்ற வளர்ந்து வரும் வங்கிகளும் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. ஹெச்டிஎப்சி மீது ரிசர்வ் வங்கி புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றத் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் கைப்பற்றும் போட்டியில் இருந்து விலகியுள்ளது.
இந்திய வர்த்தகத்தைப் போல் ஆஸ்திரேலியா, போலாந்து மற்றும் இதர தென் ஆசிய நாடுகளில் இருக்கும் வர்த்தகத்தை விற்பனை செய்யும் பணியில் முதற்கட்டத்தைத் துவங்கியுள்ளதாகச் சிட்டிகுரூப் திட்டம் குறித்து அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications