உலகின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றான சிட்டி வங்கி சுமார் 13 நாடுகளில் செய்து வரும் ரீடைல் வங்கியியல் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிட்டி குரூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகி இனி வெல்த் மேனேஜ்மென்ட் சேவையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன் வாயிலாக 13 நாடுகளில் இருக்கும் சர்வதேச நுகர்வோர் சேவை பிரிவில் இருந்து விலக நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சீனா, இந்தியா உட்பட 13 மாநாடுகளில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகும் சிட்டிகுரூப் இனி சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமே இப்பிரிவில் சேவை அளிக்க உள்ளது.
சிட்டி குரூப் மார்ச் மாதத்தில் நியமித்த புதிய சீஇஓவான ஜேன் ப்ராசர் கூறுகையில், ரீடைல் வங்கி சேவையில் சந்தையில் இருக்கும் பிற வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போடும் அளவிற்கான வடிவம் இல்லாத காரணத்தால் வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் வளர்ச்சியை இரட்டிப்பு செய்யும் வகையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
சிட்டி குரூப் ஆசியாவில் மட்டும் சுமார் 224 ரீடைல் கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. 2020 முதல் கஸ்யூமர் வர்த்தகத்தை ஆசியவில் மூடிய சிட்டி குரூப் சுமார் 6.5 பில்லியன் டாலர் வருவாய் உடன் 123.9 பில்லியன் டாலர் அளவிலான வைப்பு நிதியை வைத்திருந்தது.
சிட்டி குரூப்-கிற்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் டிரேடிங் வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானம் கிடைக்கும் காரணத்தால் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 சந்தைகளில் இருந்து ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications