பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான சிட்ரியோன் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியை தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது. இந்திய பயணிகள் வாகன மார்க்கெட்டில் பிரபலமாகவும் வலுவாக அடியெடுத்து வைக்கவும் போட்டி சந்தையில் ஜெயிக்கவும் வேண்டி எடுத்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.
ஸ்டெல்லான்டிஸ் குரூப்பை சேர்ந்த சிட்ரியோன் 2019 ஆம் ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நுழைந்தது, சிட்ரியோன் கார்களின் விற்பனை 2021இல் தொடங்கியது. புதிதாக அறிமுகம் ஆகியிருந்தாலும் இந்த கம்பெனி சிறப்பாக செயலாற்றி மார்க்கெட்டில் 0.21 சதவீத சந்தையை கைப்பற்றியது.

பெடரேஷன் ஆப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் டேட்டா படி 2023-24 நிதியாண்டில் சிட்ரியோன் 8,330 கார்களை உள்ளூர் மார்க்கெட்டில் விற்றது. அதற்கு முந்தைய ஆண்டில் 5,990 கார்களை விற்றிருந்தது.
சிட்ரியோனின் கார்கள் மாதம் 695 யூனிட்கள் விற்பனை ஆகிறது. இதை அதிகரிப்பதற்காக இந்த நிறுவனம் இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் மிகக் குறைவாக கார் உற்பத்தி செய்யும் நிறுவனமாக சிட்ரியோன் இருந்தாலும் தனது கார் விற்பனையை அதிகரித்து மார்க்கெட்டில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் சிட்ரியோன் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் தனது இலக்கை அடைவதற்கு உதவியாக எம்.எஸ்.தோனியை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் நிகரில்லா வீரராக திகழும் மகேந்திர சிங் தோனிக்கு நாடுமுழுவதும் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
2011 இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற வெற்றிகளைப் பெற்ற தோனிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் ஐசிசி ஓடிஐ விருது உள்ளிட்ட மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
பிராண்ட் விளம்பரத்தில் குறிப்பிடத்தக்க முதலீட்டை
சிட்ரோயன் செய்துள்ளது. அதில் தனது பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்காக தோனிக்கு 7 கோடி ரூபாயை (சுமார் $850,000) வழங்கியுள்ளது.
இந்த கணிசமான முதலீடு, இந்திய வாகனத் துறையின் கட்த்ரோட் நிலப்பரப்புக்கு மத்தியில் அதன் பிராண்ட் மற்றும் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ககும். இது சிட்ரியோன் நிறுவனத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications