பிரெஞ்சு கார் உற்பத்தியாளர் நிறுவனமான சிட்ரோன், இந்தியாவில் தயாரிக்கப்படும் e-C3 எலக்ட்ரிக் காரை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனம் வெளிநாட்டுக்குத் தனது தயாரிப்பை ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் புதிய சாதனையைப் படைக்கப்பட்டு உள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் Citroen நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் உள்ளது, கார் ஏற்றுமதியைச் சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

இதை மேக் இன் இந்தியா சாதனையை என்பதைக் காட்டிலும் மேக் இன் தமிழ்நாடு என அறிவித்தாலும் மிகையில்லை. தமிழ்நாட்டின் காமராஜர் துறைமுகத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு 500 சிட்ரோன் e-C3 எலக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட Global NCAP கிராஷ் சோதனையில் சிட்ரோன் e-C3 எலக்ட்ரிக் காரின் பாதுகாப்பு மதிப்பீடு 0 ஸ்டார்ஸ் பெற்று அண்மையில் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த கார் குழந்தை பயணிகள் பாதுகாப்பு பிரிவில் 1 ஸ்டார்ட்ஸ் பெற்றது கூடுதல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
இந்த நிலையிலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கார் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இக்கார்கள் 12.70 லட்சம் முதல் 13.50 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.
இந்த கார்கள் அதிகப்படியான வேகம் 107kmph, 10-100% எலக்ட்ரிக் சார்ஜ் 10 மணிநேரம், 30 நிமிடத்தில் சார்ஜ் செய்ய முடியும். 15A பிளக் மூலம் 10-80% சார்ஜ் செய்ய 57 நிமிடமாகும். ஒரு முறை புல்சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் கார் சர்வதேசச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், பாதுகாப்பு மதிப்பீட்டில் குறைவான நட்சத்திரங்கள் பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.
குறைந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை ஏற்றுமதி செய்வது, சிட்ரோன் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களின் ஏற்றுமதி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், இதை தொடர்ந்து வின்பாஸ்ட், டெஸ்லா, ஹூண்டாய் ஆகியவையும் இந்தியாவில் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு அடுத்தடுத்து ஏற்றுமதி செய்யும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications