சென்னை: தமிழ்நாடு அனைத்திலுமே முன்னோடி மாநிலமாக தான் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி பெற்ற ஒரு துறையாக வங்கித் துறை இருக்கிறது . அன்றாடம் லட்சக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்துகின்றனர் .
100 ஆண்டுகளுக்கும் மேல்: இந்தியாவில் வங்கி துறைக்கு அடித்தளமிட்டு நூறாண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரக்கூடிய பல்வேறு வங்கிகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. அதில் முக்கியமானது தான் சிட்டி யூனியன் வங்கி. 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி "தி கும்பகோணம் பேங்க் லிமிடெட்" என்ற பெயரில் தொடங்கப்பட்டது தான் சிட்டி யூனியன் வங்கி. கும்பகோணத்தை சேர்ந்த சர்வஸ்ரீ சந்தானம் ஐயர், கிருஷ்ண ஐயர் உள்ளிட்ட 20 பேரால் தொடங்கப்பட்டது .

கும்பகோணம் வங்கி: தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் வங்கி தொடங்கி சாமானிய மக்களிடமும் வங்கி சேவையை கொண்டு சேர்த்த பெருமை சிட்டி யூனியன் வங்கியை சேரும். கும்பகோணத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்த வங்கி 1930 ஆம் ஆண்டு மன்னார்குடியில் தன்னுடைய முதல் கிளையை தொடங்கியது. இதனை எடுத்து படிப்படியாக நாகப்பட்டினம் ,திருக்காட்டுப்பள்ளி ,திருவாரூர் , மணப்பாறை என அடுத்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் எங்கும் தன்னுடைய கிளையை பரப்பியது.
சென்னையில் முதல் கிளை: 1965 ஆம் ஆண்டு வங்கி கும்பகோணம் வங்கியோடு தி சிட்டி ஃபார்வேர்ட் பேங்க் லிமிடெட் மற்றும் யூனியன் பேங்க் லிமிடெட் ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டன இதனை அடுத்து இந்த வங்கியின் பெயர் தி கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி என மாற்றப்பட்டது. 1965 ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை தியாகராய நகர் பகுதியில் முதல் கிளையை தொடங்கியது. அப்படியே திருச்சி, மதுரை , கோயம்புத்தூர் என பல நகரங்களுக்கும் கிளைகளை விரிவாக்கம் செய்தது.

தென்னிந்தியாவில் சிறந்த வங்கி சேவை: 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைக் கடந்த முதன்முறையாக பெங்களூருவில் முதல் கிளையின் நிறுவியது. 1987 ஆம் ஆண்டு முதல் தான் இது அதிகாரப்பூர்வமாக சிட்டி யூனியன் வங்கி என அழைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் இருந்து இந்த சிட்டி யூனியன் வங்கி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தங்கள் சேவைகளை கணினிமயமாக்கியது. தற்போது இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படுகிறது.
120ஆவது ஆண்டு விழா: இந்த வங்கி தன்னுடைய 120ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடி வருகிறது . சென்னையில் இதற்காக நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுகள்: சிட்டி யூனியன் வங்கி டிஜிட்டல் பேமென்ட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இரண்டாவது தனியார் வங்கி என்ற என்பதற்கான விருதை பெற்றிருக்கிறது . 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சிட்டி யூனியன் வங்கி தன்னுடைய ஐபிஓவை வெளியீடு செய்து மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டிலும் இங்கு பங்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
பங்கு விலை என்ன?; இன்றைய தினத்தில் இதன் ஒரு பங்கு விலை 200 ரூபாயாக இருக்கிறது. சிட்டி யூனியன் வங்கியின் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது . கடந்த ஐந்து ஆண்டுகள் என பார்த்தால் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 43 சதவீதம் உயர்வு கண்டிருக்கிறது. 2025 ஆம் நிதியாண்டில் 6,732 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது, இதில் 1124 கோடி ரூபாய் லாபம் ஆகும் . நாடு முழுவதும் 727 கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது இதில் 600 கிளைகள் தென்னிந்திய மாநிலங்களில் செயல்படுகின்றன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications