பெங்களூருவில் உள்ள கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சி.ஜே.ராய் வெள்ளிக்கிழமை தனது ரிச்மண்ட் சாலை அலுவலகத்தில் உயிரிழந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோதே இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
ராய் வருமான வரி துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை செய்துக்கொண்டு இருக்கும் போதே வீட்டில் இருக்கும் பர்சனல் அலுவலகத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.

போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க பெங்களூர் போலீசார் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்த நிலையில் சி.ஜே.ராய் அவர்களின் சகோதரர் கூறிய விஷயம் தற்போது பெங்களூர் தொழிற்துறை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சி.ஜே. ராய் அன்று மதியம் அலுவலகத்திற்கு வந்திருந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், அவர் தனது அறைக்குள் சென்றார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஊழியர்களும் அதிகாரிகளும் ஓடிச் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நாராயணா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று சி.ஜே.ராயின் சகோதரர் சி.ஜே.பாபு ANI செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, காலை 10.40 மணிக்கு தனது சகோதரருடன் பேசியதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். வருமான வரி வழக்கு தவிர வேறு எந்த பிரச்சினையும் தனது சகோதரருக்கு இல்லை என்று உறுதியாகக் கூறினார்.
மேலும் கடன், அச்சுறுத்தல் போன்ற எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். குடும்பத்துடன் இணைந்து இறுதிச் சடங்குகளைப் பற்றி விவாதிப்பதாகவும், அலுவலக ஊழியர்களிடம் விசாரித்து உண்மையை அறிய வேண்டும் என்றும் கூறினார். இதனால் சிஜே.ராய் தற்கொலையின் முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்ற கேள்வி மிகப்பெரியதாக உள்ளது.
கான்ஃபிடன்ட் குரூப் தென்னிந்தியாவில் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களை கட்டியுள்ளது. சி.ஜே. ராய் கேரள மாநிலம் கொச்சி பூர்வீகமானவர். இந்த துயர சம்பவம் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்ஃபிடன்ட் குரூப்பின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே கலக்கம் நிலவுகிறது. போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications