டெல்லி: இந்தியாவில் ஆடியோ ஓடிடிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருந்த போதிலும், இதில் ஒரு விஷயம் சற்று கவலையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகள் நாம் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்படவே செய்தது.
அதில் குறிப்பாக ஆப்பிள் மியூசிக், ஸ்பாடிபை, யூடியூப் போன்ற இசை ஸ்ட்ரீமிங் தளங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது. கொரோனா மட்டுமின்றி, அலெக்சா மற்றும் கூகுள் ஹோம் போன்ற ஆடியோ கருவிகளும் இதன் வளர்ச்சிக்கு உதவியுள்ளன.

ஆடியோ ஓடிடி: Redseer Consulting என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 2021, 2022 நிதியாண்டில் சுமார் 5 கோடி ஆக்டிவ் யூசர்ஸ் இதுபோன்ற ஆடியோ ஸ்ட்ரீம்கள் தளங்களில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த துறை 1.6 மடங்கு, அதாவது 209 மில்லியன் ஸ்ட்ரீம்களில் இருந்து 460 மில்லியன் ஸ்ட்ரீம்களை எட்டியுள்ளது.
இந்த ஆடியோ ஸ்டிரீமிங் துறையில் சில சிக்கல்கள் இருந்தாலும் கூட இசைக் கலைஞர்களுக்கு இதன் மூலம் குறிப்பிட்ட தொகை தொடர்ச்சியாகக் கிடைத்து வருவது நல்ல விஷயம் தான்.
ஆடியோ ஓடிடி மார்கெட்டை பொறுத்தவரை லாக்டவுன் காலகட்டத்தில் 40 வயதிற்கு மேலானவர்கள் அதிகம் இதில் இருந்துள்ளனர். இப்போது 18-30 வயதானவர்களே இதன் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மெட்ரோ நகரங்களில் தான் இதன் 60% பயன்பாடு இருந்த போதிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் பயன்பாடு கணிசமாக இருந்தே இருக்கிறது.

இந்தியாவில் ஸ்பாடிபை மற்றும் யூடியூப் இடையே தான் நேரடி மோதல் இருக்கிறது. இந்தியச் சந்தையில் ஸ்பாடிபை லேட்டாகவே நுழைந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பாடிபை இந்திய சந்தையில் நுழைந்தது. இருப்பினும், அதன் பின்னர் ஸ்பாடிபைக்கு நல்ல வளர்ச்சி இருந்தே இருக்கிறது.
வளர்ச்சி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்பாடிபை மொத்த ஸ்ட்ரீம்களில் 26% வரை அதிகரித்துள்ளது. அதேபோல யூடியூபை பொறுத்தவரை ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரை யூடியூப் இசைத் துறைக்கு $6 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியதாகக் கூகுள் கூறுகிறது.
ஸ்பாடிபை நிறுவனத்தில் ஆக்டிவ் யூசர்களின எண்ணிக்கை 22% உயர்ந்து 515 மில்லியனாக 2023 நிதியாண்டில் இருக்கிறது. அதேபோல 2019இல் இந்திய சந்தையில் ஸ்பாடிபை நுழைந்த போது அது 3ஆம் இடத்தில் இருந்த நிலையில், வெறும் இரண்டே ஆண்டுகளில் கூகுள் டிரெண்ட்ஸ் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளது.
பயனாளர்களை போலவே வருவாயும் முக்கியம். ஸ்பாடிபை நிறுவனத்தைப் பொறுத்தவரைச் சந்தை மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கு ரொம்பவே முக்கியம். 2023 நிதியாண்டில் ஒட்டுமொத்த வருவாயில் 48% சந்தா மூலம் கிடைக்கிறது. அதேபோல மெட்ரோ நகரங்களில் தான் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதாம். விளம்பரம், சந்தா என அனைத்தையும் சேர்த்து ஸ்பாட்டிவை நிறுவனத்திற்கு ஒரு பயனாளி மூலம் 60 முதல் 70 ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
அதேபோல கூகுள் நிறுவனமும் யூடியூப் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே கூறுகிறது. இதன் மூலம் அவர்கள் வருவாயும் அதிகரித்தே வருகிறது. இருப்பினும், ஒப்பீட்டளவில் யூடியூப்பை காட்டிலும் ஸ்பாடிபை ப்ரீயமத்தின் கட்டணமே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏன் முக்கியம்: இது குறித்து ஸ்பாடிபை செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விளம்பரம் மூலமே இந்தியாவில் அதிக வருமானம் கிடைக்கும் என்பது நாங்கள் இங்கு வரும் முன்னரே எங்களுக்குத் தெரியும். இதுவரை 300+ நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களை உற்பத்தி செய்துள்ளோம். அதேபோல சந்தா மூலம் வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார். யூடியூபிலும் இதே கதை தான். அவர்களுக்கும் விளம்பரம் மூலமே அதிக வருமானம் கிடைக்கிறது.
இந்தியச் சந்தையில் விளம்பரங்கள் மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இவை அனைத்தும் நல்ல செய்திதான் என்றாலும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், விளம்பர வருவாய் கணிசமாகக் குறைந்தே இருக்கிறது.
RedSeer என்ற நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் மொழிகளே வேகமாக வளர்ந்துள்ளன. திரைப்படம் இல்லாத பாடல்கள் என்று வந்தால் பஞ்சாபி இதில் டாப்பில் உள்ளது. பஞ்சாபி ஸ்ட்ரீம்கள் 39% உடன் முதலில் உள்ளது. அதைத் தொடர்ந்து தெலுங்கு (19%) மலையாளம் (15%) மற்றும் கன்னடம் (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேபோல சர்வதேச இசை ஸ்ட்ரீம்கள் 11% அதிகரித்தன.
கவலை: இப்படி ஆடியோ ஓடிடி இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த சந்தை வரும் 2030இல் $2.5 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், விளம்பர வருவாய் குறைவது ஒட்டுமொத்த சந்தையையும் கவலையடையச் செய்கிறது. விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயின் எதிர்காலம் நிச்சயமற்றதாக தெரிகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications