இன்றைய நவீன உலகில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதே சமயம் வேலை வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. இப்படி இருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் கருவியாக பார்க்காமல் வருமானம் ஈட்டும் வாய்ப்பாக மாற்றி ஒரு மாணவர் சாதனை படைத்து வருகிறார். அவருடைய கதையை தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு ரெட்டிட் பதிவு பிரபலமடையத் தொடங்கியது. அதில் இந்தியாவில் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளங்களை உருவாக்கி, விற்று, வெறும் 2 மாதங்களில் ரூ. 1.5 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்தது போன்ற கதை ஒன்று பகிரப்பட்டது.

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தை உருவாக்க உதவும் ஒரு தளத்தை ரெட்டிட் பயனர் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் மஸ்க் என்ற ஒரு பயனர் அடிக்கடி தனது AI தளத்தில் இணையதளம் உருவாக்க தேவையான கிரெடிட் எனப்படும் பயன்பாட்டு உரிமைகளை அடிக்கடி வாங்கியுள்ளார்.
இப்படியே செய்து தினமும் இணையதளங்களை உருவாக்கியுள்ளார். இதைப் பார்த்த அந்த இணையத்தளத்தின் உரிமையாளருக்கு ஆர்வம் ஏற்பட்டு.. அடிக்கடி இணையதளம் உருவாக்குகிறாரே யார் இவர் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்படி மஸ்க் என்ற பயனரின் ப்ரோபைலை சென்று பார்க்கும் போது தான் அந்த ஏஐ தளத்தின் உரிமையாளருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மஸ்க் ஒரு பள்ளி மாணவர். அதுவும் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்.
வெறும் இரண்டு மாதங்களில் மஸ்க் 8 இணையதளங்களை உருவாக்கி விற்பனை செய்துள்ளார். ஒரு தளத்திற்கு 250 டாலர் முதல் 300 டாலர் வரை வசூலித்துள்ளார். அவரது மொத்த வருமானம் இதனால் ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. ஆனால் மஸ்க் ரூ.2500 மட்டுமே செலவழித்துள்ளார்.
மஸ்கின் வெற்றியை இன்னும் சுவாரசியமாக்குவதே அவர் ஒரு புரோகிராமரோ அல்லது கோடரோ கிடையாது. படைப்பாற்றல் மற்றும் ஆர்வமுள்ள ஒரு மாணவர் மட்டுமே", என்று அந்த AI தளத்தின் நிறுவனர் குறிப்பிட்டுள்ளார். மஸ்கின் கதை வேலை வாய்ப்புகளை குறைக்கவில்லை. மாறாக அதை அழகாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை நிரூபித்துள்ளது.


Click it and Unblock the Notifications