இன்றைய நவீன உலகில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் செய்யாத வேலையே இல்லை. காலை முதல் மாலை வரை நமக்கு தேவையான அன்றாட வேலைகள் சிலவற்றை AI தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்டன. இதன் அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு தேவைப்படும் பர்சனல் பைனான்ஸ் ஐடியாக்களையும் ஏஐ வழங்க துவங்கிவிட்டது.
முன்பெல்லாம் டைரியில் வரவு செலவு கணக்கை எழுதி வைப்பார்கள். ஆனால் இப்போது கிளாட் மற்றும் சாட் ஜிபிடி போன்ற AI டூல்களே யார் யாருக்கு என்னென்ன பட்ஜெட் போட வேண்டும்? பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்? சேமிப்பதற்கு எந்தெந்த விஷயங்களை செய்யலாம்? என்ற எல்லா விவரங்களையும் சொல்லிவிடுகிறது.
சமீபத்தில் இந்த இரண்டு AI டூல்களிலும் வங்கி கணக்கை இணைக்கும் வசதியை அந்தந்த நிறுவனங்கள் கொண்டு வந்தன. நிதி நிர்வாகத்திற்கு இந்த 2 டூல்களில் எது பாதுகாப்பானது? என்பதை தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் 2 நிறுவனங்கள் ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன் எஐ. சாட் ஜிபிடி மே 2026-இல் "பைனான்சஸ்" என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போது இதற்கு போட்டியாக ஆந்த்ரோபிக் நிறுவனம் கொண்டு வந்த கிளாட் தளத்தில் "பர்சனல் பைனான்ஸ்" எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உங்களுடைய வங்கி கணக்கை இந்த AI தளங்களோடு இணைத்து வைத்தால் போதும் உங்கள் வரவு செலவு திட்டம் தொடங்கி உங்கள் முதலீட்டு பழக்க வழக்கங்கள் வரை அனைத்தையும் பார்த்துக் கொள்ளும். வங்கி கணக்குகளை இணைக்க இந்த இரண்டு நிறுவனமும் பிளைட் என்னும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. இருந்தாலும் டேட்டா பிரைவசி எப்படி இருக்கும் என்பது குறித்து மக்கள் மத்தியில் சில குழப்பம் நிலவத் தான் செய்கிறது.
இந்த 2 AI தளங்களுமே ஒரு பயனரின் வரவு செலவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து முதலீடுகளை கண்காணித்து, அவர்களுடைய பெரிய இலக்குகளை அடைய உதவுகின்றன, இவை பட்ஜெட் தயாரிக்கும், செலவு முறைகளை எடுத்துச் சொல்லும். அனைத்தையும் விசுவலாகவும் பார்க்க முடியும். இதனால் உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா கிடைக்கும்.
கிளாட் மற்றும் சாட் ஜிபிடியால் உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்பவோ அல்லது விவரங்களை மாற்றவோ முடியாது. ஆனால் வெறும் கணக்கு விவரங்களை சரிபார்க்க முடியும்.
கிளாட் AI: உங்களுடைய வங்கிக் கணக்கின் பெயர், கடைசி நான்கு இலக்க அக்கவுண்ட் நம்பர், பேலன்ஸ் தொகை, கிரெடிட் லிமிட் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான பரிவர்த்தனை விவரங்களை சேமித்து வைத்திருக்கும். உங்களுடைய நிதி சார்ந்த விவரங்களை AI மாடல்களுக்கு பயிற்சி அளிக்க ஆந்த்ரோபிக் பயன்படுத்துவதில்லை. உங்கள் வங்கி கணக்கை நீக்கிவிட்டால் அந்த தகவல்கள் அப்படியே மறந்துவிடும்
சாட் ஜிபிடி: பாலன்ஸ், பரிவர்த்தனை விபரங்கள், முதலீடுகள், கடன் என சில விவரங்களை சேமித்து வைத்திருக்கும். உங்கள் உரையாடல்களை AI மாடல்களை பயிற்றுவிக்க பயன்படுத்தும். இதைத் தவிர்க்க விரும்பினால் பயனர்கள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று "Improve the model for everyone" என்ற ஆப்ஷனை டர்ன் ஆப் செய்து வைக்க வேண்டும். மேலும் நீங்கள் கணக்கை உங்கள் வங்கி கணக்கை சாட் ஜிபிடியிலிருந்து நீக்கினாலும் அதிலிருந்து 30 நாட்கள் கழித்து தான் உங்கள் தகவல்கள் முழுவதுமாக நீக்கப்படும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
கிளாட் தளத்தில் கிரெடிட் கார்டு, லோன் போன்ற எந்த ஒரு விளம்பரத்தையும் உங்களால் பார்க்க முடியாது. ஆனால் சாட் ஜிபிடி இது போன்ற அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாக குறிப்பிடவில்லை. இந்த 2 தளங்களிலும் ஒரு சில அம்சங்கள் ஒற்றுமையாக இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் டேட்டா பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கிளாட் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிக அளவிலான நிதி சேவைகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சாட் ஜிபிடி சிறந்த தேர்வு.


Click it and Unblock the Notifications