தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தில் மிக முக்கியமான ஒரு திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளால் தங்களுடைய வாகனத்தை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. தங்களுடைய வாகன உரிமத்தை யாருடைய பெயரிலும் மாற்ற முடியாது என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் படி மோட்டார் வாகன சட்டத்தில் unpaid user fee என்ற ஒரு புதிய வரையறையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலை பிரிவை பயன்படுத்தியதற்கு செலுத்த வேண்டிய சுங்க கட்டணத்தை ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்காக செலுத்த தவறவிட்டார்கள் என்பதே இதன் அர்த்தம். மின்னணு சுங்க வசூல் அமைப்பு இந்த வாகனம் இந்த சாலையை கடந்து சென்றது ஆனால் கட்டணம் செலுத்தவில்லை என பதிவு செய்திருந்தால் உங்களுடைய வாகனத்தின் உரிமத்தை வேறு யார் பெயரிலும் மாற்ற முடியாது என தெரிவித்திருக்கிறது.

உங்களுடைய வாகனத்தின் பெயரில் unpaid user fee இருக்கும்போது உங்களுக்கு no objection certificate எனப்படும் noc சான்றிதழ் கிடைக்காது. இது கிடைக்கவில்லை என்றால் உங்கள் பெயரில் இருக்கும் வாகனத்தை வேறொரு நபரின் பெயருக்கு மாற்ற முடியாது.
அதேபோல ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநில பதிவுக்கு உங்களுடைய வாகனத்தை மாற்ற முடியாது. நிலுவையில் இருக்கக்கூடிய கட்டணத்தை நீங்கள் செலுத்தினால் மட்டுமே உங்களுடைய வாகனத்திற்கான noc சான்றிதழ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு மாநிலத்தில் உங்களுடைய வாகனத்தை பதிவு செய்திருக்கிறீர்கள், ஆனால் மற்றொரு மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் அதனை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அந்த மாநிலத்தில் அதனை பதிவு செய்ய வேண்டும். அதற்கு noc சான்றிதழ் கட்டாயம். என்ஓசி சான்றிதழ் இருந்தால் தான் சட்டப்படி உங்களுடைய வாகன பதிவு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாறும், அதேபோல உங்களுடைய வாகனங்களை நீங்கள் விற்பனை செய்கிறீர்கள் எனும் போது அந்த வாகனப்பதிவு உங்கள் பெயரிலிருந்து வாங்கக்கூடிய நபரின் பெயருக்கு மாற வேண்டும் என்றாலும் noc சான்றிதழ் முக்கியம்.
இனி noc சான்றிதழ் வேண்டி நீங்கள் விண்ணப்பம் செய்யும் போது படிவம் 28 என்பது வழங்கப்படும். அந்த படிவத்தில் உங்கள் வாகனத்தின் பெயரில் எந்த ஒரு சுங்க கட்டணமும் நிலுவையில் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டுமாம். இல்லை என்றால் சட்டப்படி உங்கள் வாகனத்தை நீங்கள் விற்பனை செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications