பெங்களூரு: ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவின் கபான் பார்க் செல்பவர்கள் கண்டிப்பாக விதி கோல்ச்சாவை பார்க்காமல் திரும்ப முடியாது.
16 வயதே ஆன விதி கோல்ச்சா என்ற பள்ளி மாணவி Cleverbox என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பள்ளி குழந்தைகளின் கதை சொல்லும் திறமையை ஊக்குவித்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த சர்வதேச பள்ளியில் கல்வி பயிலக் கூடியவர் தான் விதி கோல்ச்சா . வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளை கதை சொல்லிகளாக உருவாக்கி வருகிறார்.

இந்த மாணவர்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன அதனை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு சரியான வாய்ப்பு இல்லை அதைத்தான் கிளவர் பாக்ஸ் அமைப்பு ஏற்படுத்தி தருகிறது என விதி கோல்ச்சா கூறுகிறார். இவர் குடிசைப் பகுதிகள் எல்.ஆர். நகரில் இருக்கும் மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு என கிரியேட்டிவ் ரைட்டிங் வொர்க்ஷாப்களை நடத்துகிறார். நம் மனதில் இருக்கும் விஷயங்களை எப்படி ஒரு கதையாக சொல்லுவது அந்த கதையின் மூலம் ஒரு தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு இவர் பயிற்சி வழங்குகிறார்.
சிறுவயதிலிருந்தே எழுதுவது என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறும் விதி, நிறைய புத்தகங்கள் படித்ததால் தனக்கு இந்த திறமை வளர்ந்ததாக கூறுகிறார். 2021 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான சுயதொழில் அகாடமியில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் தன்னுடைய கதை சொல்லும் திறமையை பயன்படுத்தி வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு எல்லாம் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியதாம்.
இந்த படிப்பின் போது நடைபெற்ற போட்டியில் தன்னுடைய கிரியேட்டிவ் ரைட்டிங் கிட் என்ற கான்செப்ட்டுக்கு மூன்றாவது பரிசு கிடைத்ததாம். அதில் கிடைத்த பரிசு தொகையை வைத்துக் கொண்டுதான் Cleverbox என்ற அமைப்பை இவர் உருவாக்கியிருக்கிறார். இந்த கிளவர் பாக்ஸ் அமைப்பின் மூலம் வறுமை நிலையில் இருக்கும் பள்ளி குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு கதைகளை எப்படி உருவாக்க வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்குகிறார்.
மாணவர்களின் கற்பனை திறனை இவர் தூண்டுகிறார். பல்வேறு அரசு சாரா அமைப்புகளும் இவருடன் சேர்ந்து வறுமையில் இருக்கும் மாணவர்களின் கற்பனை திறன்களை ஊக்குவிப்பதற்காக இந்த கிரியேட்டிவ் கிட் பாக்ஸ்களை வாங்கி மாணவர்களுக்கு பரிசாக வழங்குவதாக கூறுகிறார். வாரம் ஒரு முறை கபான் பார்க்கில் தன்னுடைய மாணவர்களை வரவழைத்து அவர்களுக்கு ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு என்றால் வழக்கமாக பள்ளிகளில் நடப்பதை போல இல்லாமல் விளையாட்டுக்கள் மூலமும் கலந்துரையாடல்கள் மூலமும் அவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications